உங்க பிடிஆர் நான் வர்றேன்.. எனக்கு சீட் இல்லையா? அண்ணா அறிவாலயத்தில் ஆஜர்! 2026ல் களமிறங்குவது உறுதி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரையைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தனது முன்னோர்களின் வழியை பின்பற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழக அரசியலில் பாரம்பரிய மிக்க பிடிஆர் குடும்பம் 3 தலைமுறைகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இவரது தாத்தா பிடி ராஜன் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர். அவரது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ஆகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
3ஆம் தலைமுறை அரசியல்வாதியான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2021-ல் நிதியமைச்சர் ஆகவும் அதற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். மனதில் பட்டதை சற்றென்று பேசுபவர். தமிழக அமைச்சர்களில் நன்கு படித்தவர்களில் ஒருவர்.

2026 தமிழக தேர்தல்
இடையில் ஒரு ஆடியோ விவகாரத்தால் திமுக தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தொகுதி அளவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார் பிடிஆர். மதுரை மத்திய தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து களமிறங்க அதிமுக பாஜக தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகமும் பலமாக இருப்பதால் இந்த முறை சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்ந்திருக்கிறார் பிடிஆர்.
டிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில் டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது திமுக தலைமையும் திமுக தலைமை மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக நிர்வாகிகள் இருப்பதால் இந்த முறை திமுக அவருக்கு வாய்ப்பு வழங்காது என தகவல்கள் உலாவின. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட பிடிஆரும் ஆர்வமில்லாமல் இருப்பதாக சொல்லி வந்தனர். ஆனால் தேர்தலில் போட்டியிடப் போவது உறுதி என்பதை நேரடியாகவே அறிவித்திருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
மதுரை மத்திய தொகுதி
மேலும் முன்னோர்களின் வழியை பின்பற்றி இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன் இதற்காக தலைமையிடம் வாய்ப்பு கேட்டு இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," கழக உடன்பிறப்புகளில் ஒருவனாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தேன். 30 ஆண்டுகளாக அயல்நாடுகளில் உலகளாவிய கல்வி நிறுவனங்களில் பயின்று, கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்பொறுப்புகளை வகித்த பின், எனது முன்னோர்கள் காட்டிய வழியினை பின்பற்றி, பொது வாழ்விற்குள் நுழைந்தபோது, 10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் எனது சொந்த தொழில்முறை துறைக்குத் திரும்புவேன் என்று தெரிவித்திருந்தேன்.
ஸ்டாலின்
ஆனால், என் தொகுதி வாக்காளர் பெருமக்கள் முதல் தேர்தலில் அளித்த ஆதரவை விட அதிகமான வாக்குகளால் இரண்டாம் முறை வெற்றி பெறச் செய்தது மட்டுமன்றி, என் பாசத்திற்குரிய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தமது தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கினார். அதன் மூலம், என் வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மக்கள் நலனிலும் மாநில முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை நிறைவேற்றும் நற்பேறு கிடைத்தது.
மீண்டும் போட்டி
மேலும், எனது முன்னோர்கள் தங்கள் பொது வாழ்விற்கு எந்த வரையறையும் இன்றி தமது வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை நினைவில் கொண்டு, அவர்கள் பாதையைப் பின்தொடர முடிவு செய்துள்ளேன். அவ்வகையில், மீண்டும் ஒருமுறை கழகத் தலைவரிடம், எனது பொது வாழ்க்கையைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பு கோரி, இன்று கழக தலைமையகத்தில் மூன்றாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவைச் சமர்ப்பித்தேன். கழகத் தலைவர் வாய்ப்பளித்தால் எனது தொகுதி மக்களிடம், பத்தாண்டுகளாக எனக்கு அளித்து வந்த மகத்தான ஆதரவை, இம்முறையும் தொடர்ந்து வழங்கிடக் கோருவேன்." என பதிவிட்டுள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் லிஸ்ட்.. இன்று அறிவிக்கும் டிடிவி தினகரன்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை












Click it and Unblock the Notifications