மறைக்கிறாங்க.. இது பெரிய குற்றம்.. பாய்ந்து வந்த அண்ணாமலை! "கிளாஸ்" எடுத்து ஆப் செய்த பிடிஆர்!
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஆளும் திமுக அரசு இதை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும் என்றும் கூட அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் சட்டசபையில் பேசுகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமற்றது என்றது.

பிடிஆர் பேச்சு
சட்டசபையில் பிடிஆர் பேசுகையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. இது பழைய ஓய்வூதிய திட்டத்தை விட குறைவானது ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது. இதனால் அரசுக்குத்தான் இழப்பு. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லாத விஷயம். ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் இதில் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுகிறேன் என்று, பிடிஆர் சட்டசபையில் தெரிவித்தார்.

அண்ணாமலை
இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, இங்கே பலர் புதிய பென்ஷன் ஸ்கீமில் இருக்கிறீர்கள். ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன் பழைய பென்சன் ஸ்கீம் கொண்டு வருவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பல்டி அடித்து புதிய பென்ஷன் ஸ்கீமில் தொடர்வோம் என்று கூறினார். பழைய பென்சன் ஸ்கீம் செட்டாகாது என்று அவர் கூறி உள்ளார்.

புதிய பென்ஷன் ஸ்கீம்
புதிய பென்ஷன் ஸ்கீம் வந்ததில் இருந்து அதில் கலெக்ட் செய்யப்பட்ட பணத்தை PFRDAவில் டெபாசிட் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு 10436 கோடி ரூபாயை அதில் டெபாசிட் செய்யவில்லை. தமிழ்நாட்டில் யாரெல்லாம் புதிய பென்சன் ஸ்கீமில் இருக்கீர்களோ.. நீங்கள் செலுத்திய பணத்தை தமிழ்நாடு அரசு PFRDAவில் டெபாசிட் செய்யவில்லை. இதுவரை டெபாசிட் செய்யவில்லை.

பெரிய குற்றம்
இதை மறைக்கிறாங்க. இது மிகப்பெரிய குற்றம். இது மிக பெரிய தவறு, என்று அண்ணாமலை அந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த அறிக்கையில் அடிப்படை பிழைகள் பல உள்ளன, எங்கு தொடங்குவதென்று தெரியவில்லை.

பிடிஆர் பதிலடி
சரி.. முதலில் PFRDAவில் டெபாசிட் செய்வதா? டெபாசிட்களைப் பெற முடியாத ஒழுங்குமுறை ஆணையமான PFRDAவில் 1ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை🤦♂️ பாக்கி பிழைகளை திருத்துவதற்கு, அறிக்கை வெளிவரும், என்று பிடிஆர் குறிப்பிட்டு உள்ளார். அதாவது PFRDA ஒழுங்குமுறை ஆணையம்தான். இதில் டெபாசிட் எல்லாம் செய்யவே முடியாது என்று பிடிஆர் அண்ணாமலைக்கு கிளாஸ் எடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications