அறிவுரை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. சொன்ன விஷயம்
சென்னை: நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 'மாநில உரிமைக் காவலர்' என்று அழைக்கத் தோன்றுகிறது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆட்சி நிர்வாகம் ஒரு புறம் என்றால், மறுபுறம் திராவிட இயக்க கொள்கைகளை, தத்துவங்களை இன்னும் 100 ஆண்டுகள் நிலைபெற செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பல முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார் என்றும் பிடிஆர் கூறினார்.
'தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. இந்த விழாவின் முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் துரைமுருகன்,டிஆர்பி ராஜா உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில், அவதூறுகளுக்கு பிடிஆரின் சொல்லாற்றல் எதிர்க்கட்சிகளுக்கு அவலாக மாறிவிடக்கூடாது.. இதனை கழக்கத் தலைவராக மட்டுமல்ல... அவர் மீது உள்ள அக்கறையில் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்... என் சொல்லை தட்டாத பிடிஆர்.. எனது அறிவுரையையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து விழாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், இன்றைக்கு நாட்டையே சர்வாதிகார இருள் சூழ்ந்துள்ளது..மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த காலக்கட்டத்தில், அதனை எதிர்த்து போராடி, பல வெற்றிக்களை குவித்து, நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்..
அதற்கு மிக சமீபத்திய உதாரணமாக, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மேற்கொண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளின் மாண்பை காக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கூறலாம்.. அவர் மேற்கொண்டு இத்தகைய முயற்சிகளை பார்க்கும் போது, முத்தமிழர் அறிஞர் கலைஞருக்கு மிகவும் பிடித்த விபி சிங் அவர்களை சமூக நீதி காவலர் என நான் அழைப்பது போல், நமது முதல்வர் ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்க தோன்றுகிறது..
ஆட்சி நிர்வாகம் ஒரு புறம் என்றால், மறுபுறம் திராவிட இயக்க கொள்கைகளை, தத்துவங்களை இன்னும் 100 ஆண்டுகள் நிலைபெற செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பல முயற்சிகளை தலைவர் மேற்கொண்டு வருகிறார்.. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற வரலாற்று தரவுகளை கொண்ட நூல் வெளியாவது (தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல்) திராவிட இயக்க முன்னோடிகள் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க சிறிய அளவிற்காது பங்களிக்கும் என்று நம்புகிறேன்..
நீதி கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், முற்போக்கு சிந்தனையாளரும், சிறுவயதிலேயே தனது பெற்றோர்களை இழந்த தமிழ்வேள் பிடி ராஜன் அவர்களை பொறுப்புடன் வளர்த்து திராவிட இயக்கத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் என்று மாறா பிணைப்பை ஏற்படுத்தியவருமான என் கொள்ளுத்தாத்தா எம்டி சுப்பிரமணியன் அவர்களையும் இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.. அத்துடன் நாடேபோற்றும் தலைவரின் கரங்களால் தமிழ்வேளின் இந்த மலரை வெளியிடும் பண்பாட்டு கடமையை வழித்தோன்றலாக இயன்றவரை நிறைவேற்றிஉள்ளேன்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications