சிஸ்டமே சரி இல்லைங்க.. தன்னம்பிக்கையே குறைஞ்சு போச்சு .. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: சிஸ்டமே சரி இல்லை என்றும் தன்னம்பிக்கையே குறைந்துவிட்டது என்றும் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் நிதி நிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய தினம் வெளியிட்டார்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ரூ 1 லட்சம் கோடி ரூபாய் ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது.

தமிழகம் குடும்பம்
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ 2,63,978 கடன் சுமை உள்ளது. வரி வருவாய் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. வாகன வரி கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றப்படவே இல்லை. மதுபான வருவாய் கலால் வரியாக எடுக்காமல் வாட் வரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது.

7 ஆண்டுகள் சரிவு
இது 5, 7 ஆண்டுகளாக வந்த சரிவினால் இருக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சிஸ்டமே தவறாக இருக்கிறது. எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை குறைந்து போகிறது. நம்மால் செய்ய முடியுமா இல்லையா என்ற அச்சம் வருகிறது. ஆனால் இது ஒரு ஆரம்பம். ஒரு 3 காரணத்தினால் எனக்கு மீண்டும் தன்னம்பிக்கை வருகிறது. கடந்த 2006-11 ஆம் ஆண்டு நிறைய செய்துள்ளோம். அதை பார்க்கும் போது சீரிய மேலாண்மை இருந்தால் அரசியல் துணிச்சல் இருந்தால் நம்மால் செய்ய முடியும் என்றும் உதாரணம் இருக்கிறது என்றும் தன்னம்பிக்கை வருகிறது.

சரிவுகள் வரவில்லை
அண்டைய மாநிலங்களை பார்த்தால் இது போன்ற சரிவுகள் வரவில்லை. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இந்த சரிவுகள் வரவில்லை. அப்படியென்றால் இது நமது அரசியல் துணிச்சல், நிர்வாகத் திறமையின் குறைபாடு என்பது புரிகிறது. முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். அவரது தலைமையில் செயல்படுவதில் எனக்கு நம்பிக்கை வருகிறது. இந்த நம்பிக்கையை நான் மட்டும் வைத்தில்லை, மக்களும் வைத்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் நமது நிபுணர் குழு.

வரி வசூல்
வரியே வசூலிக்காமல் எப்படி ஆட்சி நடத்த முடியும்? எனவே ஜீரோ வரி பட்ஜெட் என்பது அர்த்தமே இல்லாதது. வரி விதிக்கும் உரிமை உலகிலேயே இந்தியாவில் குறைவாக இருந்தது. நியாயமான வரிகள் எல்லாம் ஒன்றிய அரசிடமே இருக்கிறது. மறைமுக வரி மட்டுமே மாநிலங்களிடம் உள்ளது. சில நேரடி வரிகளும் தொழில் வரிகளும் மாநில அரசு வசம் இருக்கின்றன.

ஜிஎஸ்டி வரி
இந்த வரிகள் எல்லாம் ஜிஎஸ்டி வந்த பிறகு மாநிலங்களின் கையில் இல்லாமல் சென்றுவிட்டது. மனித உரிமைக்கும் கூட்டாட்சிக்கும் விரோதமாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும். இதற்கு தணிக்கை அவசியமாகிறது. யாரும் 100 சதவீதம் திருந்த மாட்டார்கள். ஆனால் நிதி நிலை மோசமாகும் அளவுக்கு நடந்து கொள்ள விடாமல் தடுக்கலாம்.

ஜனநாயக நாடு செலவு
எந்த ஜனநாயக நாடும் செலவை அதிரடியாக குறைக்க முடியாது. மூலதனம், முன்னேற்றம், உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவு செய்தால் நன்மை நிச்சயம் கிடைக்கும். பொறுப்பான அரசு என்றால் என்ன? பொறுப்பான அரசு என்பது வளர்ச்சி, சமூக நீதிக்கு உதவ வேண்டும். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விட்டது தவறு
யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமொ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் இத்தனை ஆண்டுகள் நடத்தாததால் ஒன்றிய அரசிடம் இருந்து வரும் ஆண்டு மானியம் கிடைக்காமல் போயுள்ளது. இதைத்தான் சிஸ்டமே சரி இல்லை என்கிறேன். பொருளாதாரத்தை சீர்படுத்துவது என்பது அதிரடியான மாற்றம் மூலமே சாத்தியம். பொருளாதாரத்தை சீர்திருத்த எத்தகைய மாற்றத்துக்கும் தமிழக அரசு தயார்.

நம்பிக்கை இருக்கு
நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம். இந்தியாவில் தமிழகம் பணக்கார மாநிலம் - லீக்கேஜை கண்டுபிடித்து சரியாக ஆட்சி நடத்தினால் பொருளாதார நெருக்கடி மீண்டு வரும். வரி ஏய்ப்புகளை சரிசெய்தாலே வருவாயை பெருக்க முடியும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications