நான் என்ன PMஆ? எதுக்கு வீடியோ எடுக்கறீங்கனு கேட்ட மதன்.. "நீ அக்யூஸ்டு"னு தலையில் போட்ட இன்ஸ்பெக்டர்
சென்னை: சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பப்ஜி மதனை செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது, "நான் என்ன பிஎம்- ஆ, என்னை ஏன் வீடியோ எடுக்கறீங்க" என கேட்ட மதனின் தலையில் போட்ட காவல் ஆய்வாளர், நீ அக்யூஸ்ட் என கூறி இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூபில் லைவாக ஒளிபரப்பு செய்தவர் யூடியூபர் மதன். இவர் டாக்ஸிக் மதன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி பதிவிட்டு வந்த மதன் மீது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பின. இதையடுத்து மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இருந்து இரு புகார்கள் வந்தன.

பப்ஜி மதன்
இதையடுத்து தலைமறைவான பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்தனர். மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். இவரது ஆபாச பேச்சுக்கள் மனைவி கிருத்திகாவுக்கு தெரிந்தே நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சென்னை
இந்த நிலையில் தன்னை கைது செய்ய முடியாது என வாய் சவடால் விட்ட மதனை நேற்று தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பப்ஜி மதனின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நேற்றிரவு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பிரைம் மினிஸ்டரா
இதையடுத்து பப்ஜி மதனை படம் பிடிப்பதற்காக அங்கு செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். அப்போது தலைகுனிந்தபடியே இருந்த மதனை நிமிர்ந்து பார்க்க சொன்ன போது "நான் என்ன பிரைம்மினிஸ்டரா (பிஎம்-ஆ) என்னை ஏன் வீடியோ எடுக்கறீங்கன்னு கேட்டாராம். அதற்கு உடன் இருந்த காவல் ஆய்வாளர், "நீ அக்யூஸ்ட் வாயா" என தலையில் தட்டி இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

கெஞ்சல்
கைது செய்யப்படுவதற்கு முன்னர், தன்னை போலீஸார் நெருங்கவே முடியாது, தலைவர் நித்யானந்தாவே வெளியே இருக்கிறார், என்னை எப்படி பிடிக்க முடியும் என உதார் விட்ட மதன், தருமபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீஸாரை பார்த்து அவர்களது காலில் விழுந்து கெஞ்சியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications