தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு.. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா தொற்றால் நேற்று காலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவருடைய உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இடநெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு இன்று காலை 5 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, நளினி, ராதாரவி, வாகை சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அது போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ், கடம்பூர் ராஜு, ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விவிஐபிகள் அஞ்சலி செலுத்திமுடித்துவிட்ட நிலையில் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஊர்வலத்திற்கு பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனம் தயாராக உள்ளது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக அங்கு குழித்தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்டநெரிசலை தவிர்க்க உறவினர்கள், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 200 பேருக்கு மட்டும் காவல் துறையினர் பாஸ் வழங்குகிறார்கள். அந்த பாஸை பெற்றவர்கள் மட்டும்தான் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும். பாஸ் இல்லாதவர்களுக்கு இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கோயம்பேட்டில் காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications