புதுக்கோட்டை பெட்ரோல் பங்க்கில் யார் பாருங்க.. 2 லிட்டர் பெட்ரோல் போட்டால் 2 லிட்டர் இலவசம்.. ஆஹாஹா
சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் வருமா? விலை எப்போது குறையும்? என்று வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் காத்திருக்கும் சூழலில், புதுக்கோட்டையில் வெளியான புது அறிவிப்பு, வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்துவிட்டது. நேற்று ஒரே நாளில், அதிலும் 2 மணி நேரத்தில் புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டுவிட்டது. வாகன ஓட்டிகளுக்காக நேற்று திடீரென வெளியான அறிவிப்பு என்ன?
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்தவகையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது..
குறையாத பெட்ரோல் விலை
அதாவது, சென்னையில் இன்று (23.08.2025) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compresse
ed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், எப்போது விலை குறையும்? எப்போது சலுகைகள் கிடைக்கும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தபடியே உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆஃபர் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துவிட்டது..
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.
2 லிட்டர் இலவச பெட்ரோல்
விழா நாளில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், நேற்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரை 2 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் கூடுதலாக 2 லிட்டர் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 2.5 லிட்டருக்கான விலையே செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆஃபர், புதுக்கோட்டை முழுவதும் தீயாய் பரவியது.. அடுத்த சிறிது நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட புது பெட்ரோல் பங்குக்கு, பலரும் வாகனங்களுடன் குவிய துவங்கினர்.. டூவீலர்கள், கார்கள், வேன்கள் உட்பட கனரக வாகனங்கள் வரை வாகனங்களும் பெட்ரோல் பங்க் முன்பு, வரிசை கட்டி நின்றன.. ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் நின்றன..

மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... பெட்ரோல் பங்க்கையும் தாண்டி பிரதான சாலை வரையிலும், வாகனங்கள் வரிசையாக நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன... இதனால் விரைந்துவந்த போக்குவரத்து போலீசார், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த திறப்பு விழா சிறப்பு சலுகையானது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்தது.. இது போன்ற இலவசங்களை அறிவிக்கும் முன்பு, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்துவிட்டு, அதற்கு பிறகு இலவசங்களை வழங்கவேண்டும், முன்னறிவிப்பின்றி செயல்படுவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவசர காரியத்துக்கு செல்ல முடியாத நிலைமையும் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..
திருக்குறள் - கரூர்
இதுபோலவே கரூர் மாவட்டத்திலும் 2 வருடங்களுக்கு முன்பு இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது.. அரவக்குறிச்சி வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் என்பவர் நாகம்பள்ளி பகுதியில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இளைய தலைமுறை நாளை சிறந்த தலைமுறையாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் 10 திருக்குறள்களை ஒப்பித்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை பொங்கல் தினத்தில் நடத்தியிருந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்றது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications