விஜயகாந்த் பாதிப்பு 3வது கட்டத்தில் உள்ளது.. மீண்டுவர தீவிர சிகிச்சை தேவை.. எச்சரிக்கும் டாக்டர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு 3-ஆவது கட்டத்தில் இருக்கிறது என்றும் அவர் மீண்டு வர தீவிர சிகிச்சை தேவை என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொள்கிறது என மியாட் மருத்துவமனை கூறியிருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சிலரும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சிலரும் கூறி வருகிறார்கள்.
ஆனால் எந்த மாதிரியான சிகிச்சை என்பது குறித்து மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இந்த நிலையில் விஜயகாந்துக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து வேளச்சேரியில் கிளீனிக் வைத்திருக்கும் சபரிநாத் ரவிசந்திரன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு வைரஸானது மற்றவர்களிடம் இருந்து மூக்கு வழியாகவோ இல்லை வாய் வழியாகவோ உள்ளே போய் தொண்டை பகுதியில் உட்காரும். இதனால் தொண்டை கரகரப்பு இருக்கும். அப்போது ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக் கொள்வது, சுடுதண்ணீர் குடிப்பது, கசாயம் சாப்பிடுவது, உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது போன்றவற்றை செய்யலாம். இது 4 அல்லது 5 நாட்களில் சரியாகிவிடும்.
ஆனால் சிலருக்கு அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தொண்டையிலிருந்து இறங்கி மூச்சு குழாய் எனப்படும் டிரக்கியாக்குள் சென்றுவிடும். அங்கு நுரையீரலுடன் சேர்ந்து அது பல்கி பெருகி அங்கேயே வளர தொடங்கும். அங்கு சளி சேரும். அந்த வைரஸ் நிமோனியாவாக மாறுகிறது. அப்படி மாறும்போது நோயாளிக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இந்த நிமோனியா யாரை அட்டாக் செய்யும் என்றால் வயது முதிர்ந்தவர்கள், சிகரெட், மது பழக்கம் உள்ளவர்கள், நீரிழிவு நோய், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். விஜயகாந்தை பொருத்தமட்டில் காற்றில் உள்ள 21 சதவீத ஆக்ஸிஜன் போதவில்லை. அவரது நுரையீரலில் முழுவதும் சளி இருப்பதால் கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
ஆக்ஸிஜன்களின் அளவை அதிகரிப்பதில் பல்வேறு வகைகள் உள்ளன. மூக்கில் டியூப் போல் உள்ள ஒரு வகை. ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவது அடுத்த வகை, பேக்குடன் கூடிய மாஸ்க் அணிவது இன்னொரு வகை, வென்டிலேட்டர் (பைப்பாப்) வைப்பது மற்றொரு வகை, டிரக்கியாஸ்டமி என்ற சிகிச்சை.
இவை நோயாளியின் ஆக்ஸிஜன் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. இதில் டிரக்கியாஸ்டமி என்பது தொண்டையில் துளை போட்டு நுரையீரலுடன் இயந்திரத்தை இணைப்பது! மியாட் மருத்துவமனை கூறும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் என்பது 3ஆவது நிலை, மூக்கில் வைப்பது, மாஸ்க் வைப்பதை தாண்டிய நிலை. இதிலும் நிறைய நோயாளிகள் மீண்டு வந்துள்ளார்கள். இதற்கு சிகிச்சை நாள் அதிகமாகும் அவ்வளவுதான். இவ்வாறு டாக்டர் சபரிநாத் தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications