இது என்ன ஜோக்கா? அவரை உடனே தூக்குங்க.. ஆர்சிபி மேட்சில் நடந்த சம்பவம்.. கொதிக்கும் கிரிக்கெட் உலகம்

சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் மற்றும் பஞ்சம் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பெங்களூர் 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய பஞ்சாப் கடைசி இரண்டு ஓவரில் இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பஞ்சாப் அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெங்களூர் அணி ப்ளே செல்லும் வாய்ப்பை பெற்றது.

பெங்களூர்

பெங்களூர்

நேற்று இந்த போட்டியில் படிக்கல் பேட்டிங் செய்த போது சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. பஞ்சாப் வீரர் ரவி பிஸ்னோய் 8வது ஓவரை வீச வந்தார். இந்த ஓவரில் படிக்கல் அழகாக வந்த ஸ்பின் பால் ஒன்றை, அப்படியே திருப்பி ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக மாட்டவில்லை. இதை கீப்பர் கேஎல் ராகுல் பிடித்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பந்து பேட்டில் உரசி சென்றது போல சத்தம் கேட்டது. இதனால் ராகுலும், ரவியும் விக்கெட்டா என்று நடுவரிடம் கேட்டனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் ராகுல் உடனடியாக ரிவ்யூ கேட்டார். பந்து பேட்டை கடந்து சென்ற போது உறுதியாக சத்தம் கேட்டது. இதனால் அவர் ரிவ்யூ கேட்டார்.

ரிவ்யூ

ரிவ்யூ

அதன்பின் மூன்றாவது நடுவர் கே ஸ்ரீனிவாசன் ரிவ்யூவை சோதனை செய்தார். அல்ட்ரா எட்ஜ் சோதனை செய்த போது பந்து படிக்கலின் கிளவுஸை கடக்கும் போது ஸ்பைக் வந்தது உறுதியாக தெரிந்தது. பெரிய திரையில் ஸ்பைக் வந்தது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் விக்கெட் கொடுக்காமல் நாட் அவுட் என்று கொடுத்தார்.

கோபம்

கோபம்

இதனால் கோபம் அடைந்த ராகுல், அதுதான் ஸ்பைக் வருகிறதே.. ஏன் விக்கெட் தரவில்லை என்று களத்தில் இருந்த நடுவர் அனந்தபத்மநாபனிடம் கேள்வி எழுப்பினார்.சில நிமிடங்கள் இதனால் வாக்குவாதம் நடைபெற்றது. மூன்றாவது நடுவர் ஏன் இப்படி முடிவு எடுத்தார். எந்த அடிப்படையில் நாட் அவுட் கொடுத்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் அந்த நடுவரை பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

அந்த நடுவர் செய்தது தவறு... அவரை யார் வேலைக்கு எடுத்தது. மூன்றாவது நடுவராக இருப்பது என்ன ஜோக்கா? அவரை நீக்க வேண்டும். இது விளையாட்டு கிடையாது. இவ்வளவு தொழில்நுட்பம் இருக்கும் போது கூட ஒருவரால் சரியான விக்கெட்டை அறிவிக்க முடியவில்லை என்றால் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி, அந்த மூன்றாவது நடுவரை விமர்சனம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+