அமைதியா இருக்கு.. டிரெஸ்ஸிங் ரூமில் ராகுல் டீமை கண்டித்த கோலி.. "அதை" சொல்லிக்காட்டி கடும் விளாசல்!
சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு நேற்று முதல் நாள் முன் தகுதி பெற்றது. இந்த ஆட்டத்திற்கு பின் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி டிரெஸ்ஸிங்கில் ரூமில் பேசிய சில விஷயங்கள் வைரலாகி உள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடரில் எப்போதுமே பெங்களூர் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் மறைமுகமான மோதல் உள்ளது. முக்கியமாக பஞ்சாப் அணி எப்போதும் பெங்களூரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும். பஞ்சாப் அணியில் தற்போது ஆடும் பல வீரர்கள் முன்னாள் பெங்களூர் வீரர்கள்.
பெங்களூர் அணியில் ஆடிக்கொண்டு இருந்தவர்களை கூடுதல் விலைக்கு பஞ்சாப் அணி வாங்கியது. அதேபோல் பெங்களூர் அணியில் ஆடும் மேக்ஸ்வெல் முன்னாள் பஞ்சாப் வீரர்.

எப்படி
இரண்டு அணிகளுக்கு இடையிலான 2021 ஐபிஎல் தொடரின் முதல் லீஏகே ஆட்டம் அகமதாபாத்தில் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் அஞ்சாப் அந்த பெங்களூரை வீழ்த்தி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் அணிக்கு இது பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது. பஞ்சாப் அணி இதன் பின் பெங்களூர் அணியை கடுமையாக விமர்சனம் செய்தது.

விமர்சனம்
கோலி உட்பட பெங்களூர் வீரர்கள் பெவிலியனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு.. இங்கே எல்லாம் அமைதியாக இருக்கிறது என்று இந்தி பட பாடல் வரி ஒன்றை வெளியிட்டு பஞ்சாப்அணி கிண்டல் செய்து இருந்தது. கோலி உட்பட பெங்களூர் வீரர்கள் அமைதியாக இருப்பதை பஞ்சாப் அணி நிர்வாகம் இப்படி கிண்டல் செய்தது. இது அப்போதே பெரிய சர்ச்சையானது.

பதிலடி
இந்த நிலையில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய பஞ்சாப் கடைசி இரண்டு ஓவரில் இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெங்களூர் அணி ப்ளே செல்லும் வாய்ப்பை பெற்றது.

கோலி
இதையடுத்து வெற்றிக்கு பின் கோலி டிரெஸ்ஸிங் ரூமில் பஞ்சாப் அணி குறித்து கடுமையாக பேசினார்... இப்போது அங்கே அமைதியாக இருக்கிறது என்று பஞ்சாப் அணியை விமர்சிப்பது போல கிண்டலாக குறிப்பிட்டார். பஞ்சாப் அணியை கிண்டல் செய்வது போல கோலி பேசியதும் அங்கே இருந்த வீரர்கள் எல்லாம் கைதட்டி கரகோஷம் எழுப்பினார்கள். அதோடு பெங்களூர் அணியின் பெயருக்கு பின் "குவாலிபைட்" என்ற வார்த்தையை பார்க்கக் சந்தோசமாக இருக்கிறது, என்று கோலி உருக்கமாக குறிப்பிட்டார்.
|
கோலி பஞ்சாப்
பஞ்சாப் அணி இந்த சீஸனின் தொடக்கத்தில் சொன்ன அந்த விஷயத்தை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்து கோலி இப்படி விமர்சனம் செய்து இருந்தார். கோலியின் இந்த பேச்சு வைரலாகி உள்ளது. அதேபோல் பெங்களூர் அணியின் ட்வீட்டர் பக்கமும், நாங்கள் வெற்றிபெற்றால் அதை ஓவராக கொண்டாட மாட்டோம், தோல்வி அடைந்தால் அதை ஓவராக ஆராய மாட்டோம் தங்கள் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications