Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ப வச்சு ஏமாத்திட்டாரே எடப்பாடி.. அதிமுக கூட்டணியில் தொடர்வதா? 2 நாளில் முடிவு: பூவை ஜெகன்மூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து 2 நாளில் முடிவு எடுப்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி, முயற்சி மேற்கொண்டு வந்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல் கட்சியாக புரட்சி பாரதம் உறுதி செய்திருந்தது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Puratchi bharatham Poovai jeganmoorthy upset over edappadi palanisamy plans to leave aiadmk alliance


அதிமுக அணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம்: புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது.” எனப் பேசி இருந்தார்.

1 சீட் கேட்ட பூவை ஜெகன்மூர்த்தி: தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி, பல முறை அதிமுக கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்ததோடு, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நிச்சயம் தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடைந்தது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. அதேபோல தேமுதிகவுக்கு விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற 33 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சீட் இல்லை: அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம் கட்சிக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் பூவை ஜெகன்மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். பூவை ஜெகன்மூர்த்தி கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

பூவை ஜெகன்மூர்த்தி அப்செட்: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, “ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே பேசும்போதே சீட் இல்லை என்று கூறி இருந்தால் மனம் ஆறியிருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் கை விரித்த காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புரட்சி பாரதம் கட்சியினர் கொந்தளிப்போடு, ஏமாற்றத்தோடு உள்ளனர்.

புரட்சி பாரதம் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இன்றைக்கு சந்தித்துப் பேசினோம். அதிமுக கூட்டணியில் தொடர்வோமா, கூட்டணியில் இருந்து விலகிவிடுவோமா, அல்லது வேறு கூட்டணியில் சேர்வோமா என்பது பற்றி இன்னும் 2 நாட்களில் அறிவிப்போம்.

ஏமாற்றிவிட்டார்கள்: எங்களுக்கு ஏன் சீட் வழங்கவில்லை எனத் தெரியவில்லை, இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. நம்பிக்கையோடு இருந்த நிலையில் இப்போது ஏமாந்துவிட்டோம். பல நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகலாம் எனக் கூறியுள்ளனர். பரிசீலனை செய்து முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+