Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை காசிமேட்டில் அர்த்த ராத்திரியில் துள்ளிய மீன்கள்.. குஷியில் மீனவர்கள்.. விடைபெற்றது புரட்டாசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 தினங்களாகவே காசிமேடு பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.. மீனவர்களும், மீன்பிரியர்களும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.. மீன் மார்க்கெட் மட்டுமல்லாது, தமிழகத்தின் கறிகடைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. காரணம், புரட்டாசி கிளம்பி போய்விட்டது..

வழக்கமாக சென்னை காசிமேட்டில், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மீன்பிடி தொழிலில் தினமும் ஈடுபட்டு வருகின்றன.. எனினும், வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க செல்வது மீனவர்களின் நடைமுறையாக இருந்து வருகிறது.
kasimedu purattasi

சனிக்கிழமை நள்ளிரவுகளில் மீனவர்கள், கரையிலிருந்து விதவிதமான மீன்களுடன் கரை திரும்புவார்கள்.. ஞாயிறு மட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் காணப்படும். ஆனால், ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மட்டும் காசிமேடு வியாபாரமின்றி காணப்படும்..

இறைச்சி: தமிழகத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே இந்த புரட்டாசியில் சாப்பிடுவார்கள். இந்த ஒரு மாதத்துக்கு மீன்கள் உட்பட இறைச்சியை சாப்பிட மாட்டார்கள். இதன் காரணமாக மீன்கள் விலை குறைந்து காணப்பட்டதுடன், இதனால் மீனவர்களும் கவலை அடைந்தனர்.

நேற்றைய தினம் புரட்டாசி முடிந்துவிட்டது.. இதனால் விடிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் மீன் வாங்க குவிந்துவிட்டனர். பலரும் மீன் வாங்க வருவார்கள் என்பதால், மீனவர்கள் முன்கூட்டியே கடலுக்கு சென்று விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும், மீன்களை குவியல் குவியலாக கரைக்கு அள்ளி கொண்டு வந்து போட்டார்கள். நீண்ட தூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களும், நேற்று நள்ளிரவில் கரைக்கு திரும்பிவிட்டார்கள். எனவே, அனைத்து வகையான மீன்களும் தங்கு தடையின்றி காசிமேட்டில் காணப்பட்டன.

மக்கள் ஆர்வம்: அதிலும் ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.. அதிகாலை 4 மணி முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க வந்தனர். இத்தனைக்கும் சென்னையில் மழை பெய்தாலும்கூட, வியாபாரிகள் மழையில் நனைந்தபடியே விற்பனையில் ஈடுபட்டனர்.. ஒரு கிலோ வஞ்சிரம்- ரூ.950, சங்கரா- ரூ.500- 550, இறால்- ரூ. 450- 550க்கு விற்பனை ஒரு கிலோ நண்டு- ரூ.300-400, வவ்வால்- ரூ.400-500க்கு விற்பனையாகிறது.

அதேபோல, கடலூர் துறைமுகம் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதுடன், ஆங்காங்கே இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருந்தது. ஆனால், இன்று அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும்
ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

பாறை மீன்: வஞ்சரம் கிலோ ரூ.650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தத்தில் தமிழகம் முழுவதுமே, கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடியில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலும் அசைவ பிரியர்கள் கூட்டம் நேற்று முதலே அலைமோதியது. அதிலும் இந்த முறை ஷீலா மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை ஷீலா மீன் விற்பனை ஆனது.

மீன்கள் விலை: விளை மீன் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும், ஊளி கிலோ 400 ரூபாய் வரைக்கும், பாறை 350 முதல் 400 ரூபாய் வரையும் மஞ்ச கிளி, வரி கிளி ஆகிய மீன்கள் கூடை 2000 முதல் 2500 ரூபாய் வரை விற்பனையானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+