பாஜக தலைமை அலட்சியம்..கூட்டணியை முறித்த அதிமுக- புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் அதிருப்தி
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்ணா திமுக விலகுவது என்ற முடிவு ஈடு செய்ய முடியாத இழப்பு- காஸ்ட்லி மிஸ்டேக் என அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சன் நியூஸ் தொலைக்காட்சியின் கேள்விக் களம் நிகழ்ச்சியில் அதன் செய்தி ஆசிரியர் மு.குணசேகரனுடனான உரையாடலில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு: அதிமுக- பாஜக கூட்டணி முறிவு என்பது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்பதை இப்போது நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. அரசியலில் எது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்ணா திமுக விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த விலகலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை பொறுப்பேற்றிருக்கக் கூடிய பாஜக தலைமை, இந்த நிமிடம் வரையில் ஏற்றுக் கொண்டதாகவோ நிராகரித்ததாகவோ எதுவுமே சொல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? நாடகத்தில் வருவது போன்ற செயலா? என்று பார்க்க இயலாது. பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

ஈடு செய்ய முடியாத இழப்பு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுமேயானால் அது ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே பார்க்கிறேன். இது காஸ்ட்லி மிஸ்டேக். இதற்கு ஈடாக எதனையும் சொல்ல முடியாது. 2019 தேர்தலில் அண்ணா திமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைந்தது. 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் இருந்தது. இது தொடரும் என்பது போலவேதான் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 25-வது ஆண்டு விழாவில் மோடி அருகே எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டிருந்தார்.

டெல்லி தலைமை தடுக்கவில்லை: அதேபோல அண்ணாமலையின் நடைபயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய போதும் அதிமுக சார்பாக உதயகுமார் கலந்து கொண்டார். ஆகையால் இந்த நிமிடம் வரை தேசிய அளவிலான பாஜகவுக்கும் அண்ணா திமுகவுக்கும் எந்த மாறுபாடும் இல்லை. ஆனால் பாஜக மாநில தலைமையான அண்ணாமலைக்கும் அண்ணா திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்ற போது டெல்லி தலைமை ஏன் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை? என்பது தெரியவில்லை.

அதிமுகவின் முடிவை எதிர்பார்க்கவில்லையோ?: டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையேயான ஒருங்கிணைப்புக்கு அவர் வர வேண்டு என நேரில் வலியுறுத்தினேன். அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பேசினேன். ஆனால் அதன்பிறகும் ஏன் தலையிடவில்லை என தெரியவில்லை. ஒருவேளை அதிமுக, இதுபோன்ற முடிவுகளை எடுக்காது என டெல்லி தலைமை எதிர்பார்த்தது என்னவோ?
பாஜக தலைமை விரும்புமா?: எந்த கூட்டணியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க எதிரணியை வீழ்த்தி- தோற்கடிக்க வேண்டும். அப்படியான நிலையில் கூட்டணி பலவீனப்பட வேண்டும் என்றா பாஜக தேசிய தலைமை விரும்பும்? என்பதுதான் கேள்வி. ஒருவேளை இது எல்லாம் சிறிய சிறிய பிரச்சனை, சரி செய்து கொள்ளலாம் என எளிதாக எடுத்திருப்பார்களே தவிர பெரிய உள்நோக்கம் இருப்பதாக கருதவில்லை.
பாஜக தலைமை மீது ஆதங்கம்: ஒரு கூட்டணியில் இடம்பெற்றுவிட்டால் சிறிய, பெரிய கட்சி என்று இல்லை. உதிரி கட்சி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த கூடாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கிறது. ஒரு சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் 10,000 அல்லது 15,000 வாக்குகள் பெறக் கூடிய ஒரு கட்சி கூட மிக முக்கியமான பங்களிப்பை செய்யக் கூடும். சிறிய கட்சிகளை நடத்துவதைப் போல அண்ணா திமுகவை பாஜக நடத்திவிட்டதாக பார்க்கவில்லை. அதேநேரத்தில் பிரச்சனையின் தன்மை அவர்களுக்கு சரியாக புரியவில்லையா? அல்லது எடுத்து கொள்ளப்படவில்லையா? அல்லது தமிழ்நாட்டுக்கான முக்கியத்துவத்தை பாஜக தலைமை கொடுக்கவில்லையோ என்கிற ஆதங்கம்தான் வருகிறது.
அதிமுக அல்லாத கூட்டணியா?: தமிழ்நாட்டில் அதிமுக அல்லாத ஒரு அணியை நீண்டகாலத்துக்கு பாஜக அமைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. பாஜகவுக்கு நம்பிக்கையான கட்சிகள் அண்ணா திமுக, புதிய தமிழகம் போன்றவைதான். அதனால் அண்ணா திமுகவை எளிதாக இழந்துவிட பாஜக முடிவு செய்திருக்குமா? என்பது தெரியவில்லை.
எந்த அணியில் புதிய தமிழகம்?: புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கிறதா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறதா? என்ற கேள்வியே எழவில்லை. அப்படி ஒரு நிலைமை அதாவது அதிமுக இல்லாமல் பாஜக தனித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை கட்டி எழுப்ப முயற்சிக்கும் போது பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து முடிவெடுப்போம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications