விஜயின் தவெக கூட்டணியில் இணையப்போகும் புதிய தமிழகம்? கிருஷ்ணசாமி சொன்ன பதில்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக தனித்து களம் காண்கிறது. இந்நிலையில் தான் புதிய தமிழகம் கட்சி கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு கிருஷ்ணசாமி கூறிய பதில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி வந்துவிட்டோம். அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் ரொம்ப தூரம் விலகி விந்துவிட்டோம். எங்களுக்கும் அவர்களுக்கும் உறவு என்பது இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் அமைத்துள்ள கூட்டணி வலுவற்ற நிலையில் உள்ளதுது.
கடந்த 1996ல் நான் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து ஓட்டபிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். புதிய தமிழகம் கட்சி 60 முதல் 70 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைக்க கூடிய தொகுதிகள் உள்ளன. இந்த ஓட்டுகளை அப்படியே பெற்றால் நாங்கள் வெற்றி காண்போம்.
அதன்படி புதிய தமிழகம் கட்சி 10 முதல் 12 தொகுதகிளை குறிவைத்து தனித்து களமிறங்கினாலும் வெற்றி பெறும் என்ற சூழல் உள்ளது.
திமுகவுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாளை மறுதினம் நாங்கள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம். இதில் இருந்து பின்னோக்கி செல்லும் எண்ணம் இல்லை.
இதையடுத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கிருஷ்ணசாமி, ''அவர்கள் (தவெக) முயற்சி எடுத்தால் அதுபற்றி நாங்கள் சிந்திப்போம். அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் பரிசீலனை செய்வோம்'' என்றார். இதன்மூலம் தவெக அழைத்தால் கூட்டணி பற்றி யோசிப்போம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications