அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி சந்தர்பவாத கூட்டணி: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு
சென்னை: அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி சந்தர்பவாத கூட்டணி என்று அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரு அணியும், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.
இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் ஒரு அணியாகவும், டிடிவி தினகரனின் அமமுக ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தல் சந்திக்கின்றன,

பாஜக 20 தொகுதிகள்
அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 20 இடங்களில் போடடியிடுகிறது. இந்த முறை எப்படியும் சட்டசபைக்கு எம்எல்ஏக்களை அனுப்பிவிட வேண்டும் என்று பாஜக உறுதியாக உள்ளது. இந்நிலையில் ஆட்சியை பாஜக அதிமுக கூட்டணி பிடிக்குமா அல்லது திமுக பிடிக்குமா என்பது குறித்த ஆர்வம் அதிகமாக உள்ளது.

அதிகம் பேர் கருத்து
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரபல ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில். . அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன என்பது குறித்த கேள்விக்கு, அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி சந்தர்பவாத கூட்டணி என 36.87 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூட்டணி நல்லது
அதேநேரம் அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி நல்லது என 16.68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணியால் அதிமுக ஆதாயமடையும் என்று 8.44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு பாஜக உடனான கூட்டணியால் பாதிப்பு ஏற்படும் என்று 5.91 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெரியவில்லை
அதிமுக -பாஜக இடையேயான கூட்டணியால் பாஜக ஆதாயமடையும் என்று 5.91 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வேறு கருத்தை தெரிவித்தவர்கள் 7.61 சதவீதம் பேர் ஆவார். தெரியாது அல்லது சொல்ல தெரியாது என்று 17.49 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications