பல கோடி பேருக்கு நிம்மதி.. கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாறுகிறது.. இனி பழைய மாதிரி இல்லை
சென்னை: வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது. தற்போது உள்ளது போல அல்லாமல் புதிய முறைப்படி இனி கேஸ் விற்பனை நடக்க உள்ளது.
அதன்படி திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (ஜிசிஆர்) சட்டத்தில்; இணைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மீட்டிங் ஒன்றில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி சிலிண்டர்களில் இனி க்யூ ஆர் கோடு இருக்கும்.
இந்த கோடை இனி ஸ்கேன் செய்தால் மட்டுமே சிலிண்டர் வாங்க முடியும். சிலிண்டர் திருட்டை தடுக்க இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் வீட்டு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. க்யூ ஆர் கொடு காரணமாக.. வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்பிஜி கேஸ்: ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களாக LPG சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் சோதனை செய்யப்படுகிறது.
மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள்
மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சென்னை கட்டுப்பாடு இல்லை; இந்த நிலையில்தான் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறு என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications