மெட்ரோ ரயில் நிலையங்களை போல் நவீன நுழைவுவாயில்.. QR code அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே அனுமதி
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு போலி உறுப்பினர்களின் வருகையை தடுக்கும் வகையில் QR code பொருத்தப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதிமுக பொதுக் குழு இன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய ஓபிஎஸ் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்படுகிறது.
இது ஒரு புறமிருந்தாலும் பொதுக் குழுவுக்கான ஏற்பாடுகளை எடப்பாடி தரப்பினர் ஜரூராக செய்துள்ளனர். இந்த பொதுக் குழுவுக்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ் தரப்பட வேண்டிய நிலையில் தனக்கு 7 ஆம் தேதிக்கு முன்னர்தான் வழங்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

பொதுக் குழு
இந்த நிலையில் இன்று காலை முதலே பொதுக் குழு உறுப்பினர்கள் , செயற்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் என சென்னை வானகரத்தில் திரண்டு வருகிறார்கள். கடந்த முறை வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பால் தத்தளித்த எடப்பாடி பழனிச்சாமி தாமதமாகவே விழா மேடையை வந்தடைந்தார்.

தொண்டர்கள் உற்சாகம்
தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து வேறு இடத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழுவுக்கு இடம் பார்க்க திட்டமிடப்பட்டது. முதலில் விஐபி ரிசார்ட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு அங்கு பணிகளும் தொடங்கின. எனினும் சில பிரச்சினைகளுக்காக அதிமுக பொதுக் குழுவை வானகரத்திலேயே நடக்க முடிவு செய்யப்பட்டது.

பிரம்மாண்ட மேடை
இந்த நிலையில் வானகரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதலே உறுப்பினர்கள் திரண்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

போலி உறுப்பினர்கள்
இந்த பொதுக் குழுவுக்கு போலி உறுப்பினர்களின் வருகையை தடுக்க அனைவருக்கும் புகைப்படத்துடன் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை சரி பார்க்க மெட்ரோ ரயில் நிலையங்களை போல் நவீன நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களின் அடையாள அட்டை ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications