"மதநல்லிணக்கம் காப்போம்.." காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்.. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
சென்னை: காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானபோது, அங்குப் புலம் பெயராமல் இந்தியாவை அதிகளவிலான இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அப்போது "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949ஆம் ஆண்டு இந்தியன் யூனியன் முசுலிம் லீக் கட்சியை தலைமை தாங்கினார் காயிதே மில்லத். அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மு க ஸ்டாலின்
அவரது 126ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார். கண்ணிய தென்றல் காயிதே மில்லத்தின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய மதநல்லிணக்கம் காப்போம். அவரைப் போலத் தமிழ்ப் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்ணிகைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவராகவும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 126ஆவது பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றி வணங்குகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Array
அதேபோல காயிதே மில்லத் 126வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹஸ்ஸான் மரியாதை செலுத்தினார். அமமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், சிஆர் சரஸ்வதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

டிடிவி தினகரன்
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் எழுச்சியின் அடையாளம், அனைத்து தரப்பினரும் மதித்துப் போற்றிய ஆளுமை கண்ணியத்திற்குரிய பெருமகனார் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களை, அன்னாரது பிறந்த நாளில் போற்றுகிறேன். மதநல்லிணக்கத்தைப் பாதுகாத்திடவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும்,மாநில உரிமைகளுக்காகவும்,இஸ்லாம் சமூகத்தினர் உயர்கல்வி பெறவும் காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை எப்போதும் நினைவு கூர்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications