சனாதன தர்மத்தில் ஜாதி பாகுபாடு கிடையாது! தீண்டாமையும் இல்லவே இல்லை.. ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: சனாதன தர்மத்தில் ஜாதி பாகுபாடு கிடையாது, அனைவரும் ஒரே குடும்பம் என கருதுவதுதான் சனாதன தர்மம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதை அவர் வள்ளலாரின் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை சார்பில் வள்ளலாரின் 202 ஆவது வருவிக்கவுற்ற பெருவிழா மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் அந்த உரை நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட முதல் பிரதியை பாலகிருஷ்ணா தம்பையா பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வம் மனிதனாக அவதரித்து நிலையை சரி செய்வது என்பதுதான் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
அந்த வகையில் நம் நாடு மிகவும் கடினமான சூழலில் இருந்த போது அவதரித்த தெய்வம் வள்ளலார். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் ஞானத்தால் வெளிப்படுத்தியவர்கள் ரிஷிகள். இந்த உண்மையை வெவ்வேறு மொழி பேசிய வெவ்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
இவ்வாறுதான் பாரத நாடு உருவானது. யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை. அதே போல் யாரும் யாரைவிடவும் தாழ்ந்தவர்கள் இல்லை, எல்லோரும் சமம்தான். இதை ரிக் வேதம் கூறுகிறது. இதுதான் பாரத தர்மம். இதைத்தான் நாம் சனாதன தர்மம் என்கிறோம். ஆனால் உண்மையில் சனாதன தர்மம் என்பது ஜாதி பார்ப்பது அல்ல. யாராவது ஜாதி பாகுபாடு பார்த்தால் அது சனாதன தர்மமே இல்லை.
சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் ஒரே குடும்பம் என கருதுவதுதான் சனாதன தர்மம். இது எந்த பாகுபாட்டையும் ஏற்றுக் கொள்ளாது. தீண்டாமையும் ஜாதி பாகுபாடும் பார்ப்பது சனாதன தர்மம் அல்ல.
காலங்கள் மாறி வரும் நிலையில் மனித பலவீனங்களாலும் உள் பிரச்சினைகளாலும் சில நேரங்களில் வெளியில் வந்த அச்சுறுத்தல்களாலும் சனாதன தர்மம் மாறியிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் தெய்வம் மனிதனாகப் பிறந்து நிலையை சரி செய்கிறது. இவ்வாற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications