செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆடு தானாக வந்து மாட்ட போகுது.. ஆளுநரை காட்டமாக விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி
சென்னை: ஆடு தானாக வந்து மாட்ட போகுது என ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 21 ஆம் தேதி அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் வகித்து வந்த துறைகள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார். இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் சில மணி நேரங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அறிவிப்பை ஆளுநர் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கிவிட்டார் என சொல்வதே தவறு. அவர் நோட்டீஸ்தான் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
நீக்கும் அதிகாரம் எல்லாம் ஆளுநருக்கு இல்லை. அவர் சட்டம் தெரியாமல் வலையில் மாட்டிக் கொள்ள போகிறார். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இரு ஆளுநர்களுக்கு குட்டு குட்டியுள்ளது. இவரும் அதே மாதிரி கொட்டு வாங்கிக் கொண்டு போக போகிறார்.
இதை திராவிட முன்னேற்ற கழகம் சட்ட ரீதியாக சந்திக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மாநில சுயாட்சியை காக்கும் வகையில் இந்த வழக்கை திமுக நடத்தி தீர்ப்பை பெறும். கொலை குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷா, உள்துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு முடிந்து போன ஒரு வழக்கு.
மத்தியில் அமைச்சர்களாக உள்ள 33 பேர் மீது வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ராஜினாமா செய்வார்களா? பிரதமர் மோடி மீது குஜராத்தில் கொலை வழக்கு இருந்திருக்கிறது. அவர் இந்தியாவின் பிரதமராக இல்லையா? அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முகாந்திரம் என்பது வேறு ஆதாரம் என்பது வேறு. இதை முதலில் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications