Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூளையை தின்னும் ரேபிஸ் வைரஸ்! நீயா நானாவில் பங்கேற்ற மருத்துவர் தெரு நாய்கள் குறித்து சிறப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெரு நாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் ரேபிஸ் பாதிப்பு உயிரை கொல்லும் அளவுக்கு கொடுமையானதாக மாறியிருக்கிறது. இந்நிலையில், இதை எப்படி தடுப்பது? ரேபிஸ் எவ்வளவு பாதிப்பு கொண்டது என்பது பற்றி நீயா, நானா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அருணாச்சலம் முத்தையா ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்திருக்கிறார்.

பேட்டியில் அவர் பேசியதாவது, "ரேபிஸ் நோயின் ஆபத்து பற்றி சமூகத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. ரேபிஸ் பாதிப்புகள் 89 மற்றும் 90 காலகட்டங்களில் வேறு ஒரு பரிணாம நிலையை அடைகிறது.

rabies virus Stray Dogs

தடுப்பூசி

அதாவது அதற்கு முன்னர் வரை ஒரே ஒரு தடுப்பூசி மட்டும் போட்டால் போதும் என்று இருந்த நிலைமை மாறி, அடுத்தடுத்த தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற நிலைமை உருவானது. ஏனெனில் ஒரு தடுப்பூசியால் மட்டும் ரேபிஸ் பாதிப்பை முழுமையாக தடுத்து விட முடியாது என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்தான் அடுத்தடுத்த டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

உயிரிழப்பு அபாயம்

இந்த மாற்றம் நடப்பதற்கு முன்னர் வரை ஒருவர் அடிக்கடி என்னிடம் வந்து, தன்னுடைய நாய் வேறு ஒருவரை கடித்து விட்டது என்று கூறி கடிபட்டவரை உடன் அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்வார். முன்னர் சொன்னதைப் போல தொடக்கத்தில் ஒரே ஒரு டோஸ் என்று மட்டும் இருந்த தடுப்பூசி பின்னர் பல டோக்கன் ஆக பரிணமித்தது. இதை அந்த பெண்ணிடம் நான் சொன்ன போது அதற்கு பின்னர் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு வரவே இல்லை. நான் ஏதோ கூடுதலாக பணம் வாங்க டோஸை அதிகரித்ததாக அவர் நினைத்துக்கொண்டார்.

பாதிப்பு எப்படி இருக்கும்?

ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணத்தை சொல்கிறேன். செஞ்சி பக்கத்து ஊரிலிருந்து பெற்றோர் தனது மகனை இங்கு அழைத்து வந்திருந்தனர். பார்த்தவுடன் அவர் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை சொல்லிவிட்டேன். அரசு மருத்துவமனையில் இளைஞரை அனுமதிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினேன். ஆனால் மூன்று நாட்களாக அவர்கள் வேறு வேறு மருத்துவமனைக்கு சென்று சேர்க்க முயற்சித்தனர். எந்த மருத்துவமனையிலும் இளைஞரை சேர்க்கவில்லை. இறுதியாக அரசு மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். ஆனால் மூன்றாவது நாள் அந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். ரேபிஸ் எவ்வளவு கொடியது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

ரேபிஸுக்கு தடுப்பு மருந்து கிடையாதா?

சரி இவ்வளவு கொடியதாக இருக்கக்கூடிய இந்த வைரஸை அழிக்கக்கூடிய ஆன்டிவைரஸ் நம்மிடம் இல்லையா என்று கேட்டால் இல்லை. மேற்கு நாடுகளில் இந்த வைரஸ்க்கு ஆண்டுக்கு வெறும் மூன்று பேர் மட்டுமே உயிரிழக்கிறார்கள். தடுப்பூசி இந்த வைரஸ் பாதிப்பை 100% முழுமையாக தடுத்து விடுகிறது. ஆனால் இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் மட்டுமே இந்த வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலை நாடுகளின் உயிரிழப்பு குறைவாக இருப்பதாலும், இந்தியா ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழப்பு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் இல்லாததாலும் மருத்துவ உலகம் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மருத்துவ உலகின் சாதனை

தடுப்பூசி எவ்வளவு பெரிய அரண் என்பதை மற்றொரு சம்பவத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்டியன் காலேஜிலிருந்து இரண்டு நபர்கள் வெளியே வந்து கொண்டிருக்கும் போது மூன்று மாத நாய்க்குட்டியை எடுத்து கொஞ்சுகிறார்கள். அந்த நாய் குட்டி அவர்கள் இருவரையும் பல இடங்களில் கடித்து வைக்கிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த இருவரில் ஒருவர் தடுப்பூசி போடுகிறார். மற்றொருவர் தடுப்பூசி எதையும் போடவில்லை. தடுப்பூசி போட்டவரும் ஒரே ஒரு டோஸ் மட்டுமே போட்டு இருக்கிறார். எனவே ஒரு டோஸ் போட்டவரை மட்டும் கஷ்டப்பட்டு காப்பாற்ற முடிந்தது. மற்றொருவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஒருவர் காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய சாதனையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இதுதான் தடுப்பூசியின் பலன்.

அறிகுறிகள்

சரி இந்த நாய் கடிக்கு பிறகு உடலில் வைரஸ்கள் எந்த வேகத்தில் பரவும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு பதில் அது கடித்த இடத்தை வைத்து தான் சொல்ல முடியும். அதாவது முகத்துக்கு அருகே அல்லது மூளைக்கு மிக நெருக்கமாக கழுத்து, தோள்பட்டை உள்ள இடங்களில் கடி ஏற்பட்டிருந்தால் அந்த வைரஸ் உடனடியாக பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேறு ஏதாவது இடத்தில் கடித்து இருந்தால் மூன்று வாரங்களில் இதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும். அல்லது சில நேரங்களில் ஒன்று இரண்டு ஆண்டுகள் கழித்தும் தெரிய வரலாம்.

10 ஆண்டுகளுக்கு பிறகு கூட பாதிப்பு

நான் மேற்கூறிய செஞ்சி இளைஞன் சம்பவத்தில், அந்த இளைஞருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் நாய் கடித்ததாக பெற்றோர்கள் கூறினார்கள். அப்படி என்றால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கூட வைரஸ் உடலில் இருந்து வேகம் எடுத்து மூளையை தாக்கும் என்பத நிரூபணமாகியுள்ளது. இந்த வைரஸ் நேரடியாக மூளையின் திசுக்களைததான் தின்னும். எனவே பாதிக்கப்பட்டவர் கோமாவுக்கு போய் இறந்துவிடுவார். அல்லது மிகவும் ஆக்ரோஷமாக இறந்துவிடுவார். எனவே நாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+