அதிர்ச்சி.. ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது - நீட் ஆய்வுக் குழு உறுப்பினர் ரவீந்தரநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தமிழக ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது என நீட் ஆய்வுக் குழுவின் உறுப்பினர் ரவீந்தரநாத் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்காமலும் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆளுநருக்கு கண்டனம்

ஆளுநருக்கு கண்டனம்

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

கட்சிகள் போராட்டம்

கட்சிகள் போராட்டம்

இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன், திராவிடர் விடுதலைக்கழகம் ஆகியோர் போராட்டம் அறிவித்துள்ளதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீட் ஆய்வுக்குழு

நீட் ஆய்வுக்குழு

முன்னதாக நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நீட் தேர்வு ஆய்வு குழு ஒன்றை அமைத்தது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசு, குழுவில் மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவகர் நேசன் உள்ளிட்ட 8 பேர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பது போன்ற ஐந்து ஆண்டு புள்ளி விவரங்களை சேகரித்து ஓர் அறிக்கை சமர்ப்பிக்க குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது,

Recommended Video

    சென்னை: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா: ஆளுநர் ரவி மீது முரசொலி கடும் விமர்சனம்!
    ரவீந்தரநாத் பேட்டி

    ரவீந்தரநாத் பேட்டி

    இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வு குழுவின் உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டியளித்தார். மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை எனவும் கூறினார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக ஆளுநரின் அறிக்கை உண்மைக்கு புறம்பாக உள்ளது. நீட் தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்பதை ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது என கூறினார். நீட் தேர்வு ஏழைய எளிய மாணவர்களுக்கு உதவும் என்ற கவர்னரின் கருத்து சரியானதல்ல எனவும் அவர் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+