Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலை 9 டூ அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை திமுகவுக்காக பிரச்சாரம்! பசி களைப்பு தெரியாது! -ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1989 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு ஓட்டுக் கேட்டு காலை 9 மணிக்கு பிரச்சார வேனில் ஏறினால் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை கூட பரப்புரை பயணம் தொடரும் என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இப்போது போல பிரச்சாரம் செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் அன்று கிடையாது என்றும் ஒரு முறை திண்டுக்கல்லில் அதிகாலை 2 மணிக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி திமுகவுக்கு பிரச்சாரம் செய்த போது பசி மயக்கத்தில் மயங்கி விழுந்த நிகழ்வையும் நினைவுகூர்ந்துள்ளார்.

Radhika Sarathkumar remember on her days campaigning for DMK

கருணாநிதி நூற்றாண்டு நடைபெறும் இவ்வேளையில் நடிகை ராதிகா சரத்குமார் கருணாநிதி பற்றிய தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருப்பதால் அதனை இங்கே பார்க்கலாம்.

தந்தை மகளை போல்: ''ஒரு தந்தையைப் போல கலைஞரும், ஒரு மகளைப் போல நானும் பழகிய காலங்கள் என்னால் என்றென்றும் மறக்க முடியாதவை. அவரைப்போல என் மீது அன்பு காட்டிய ஒரு தலைவரை நான் இன்றுவரை பார்க்கவில்லை. ஏதாவது ஒரு முக்கியமான விஷயமாக நான் சந்திக்க வேண்டும் என்று போன் செய்தால் அடுத்த நிமிடம் அந்த கரகரப்பான குரலில் 'என்னம்மா நலமா இருக்கியா? உடனே வா.. உன்னை பார்த்து பேசிவிட்டு கிளம்புறேன் என்பார்! தலைவர் உடனே வரச்சொல்லி விட்டாரே என்று நான் விழுந்தடித்து அவசர அவசரமாக ஓடிச்சென்று அவரைச் சந்தித்து பேசிவிடுவேன்.''

1989 சட்டசபைத் தேர்தல்: 1989-ல் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலின்போது, தி.மு.க. பிரச்சாரமேடைகளில் நான் கலந்து கொண்டு பேசினேன். தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இப்போது போல பிரச்சாரம் செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் அன்று கிடையாது. காலையில் 9 மணிக்கு பிரச்சார வேனில் ஏறினால் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை கூட பயணம் தொடரும். கிராமம் கிராமமாக செல்வோம். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நிற்பார்கள். பிரச்சார வேனை மறித்து நின்று நம்மைப் பேசச் சொல்வார்கள். பசி பயணக் களைப்பு இதையெல்லாம் மறந்துவிட்டு சிரித்த முகத்தோடு வேனில் நின்றபடி பேசுவேன். ஆர்ப்பரிக்கும் மக்களின் மத்தியில் நான் பேசுவதை அடுத்த நாள் காலையில் பத்திரிகையில் அப்படியே பிரசுரிப்பார்கள். அதைப் படித்துவிட்டு அதிகாலை 5 மணிக்கே கலைஞர் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைப்பார்.

அதிகாலையில் போன்: "உன் பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு. கூட்டத்தினரைப் பார்த்து நேருக்கு நேர் நீயே கேள்வி கேட்டு.. அவர்களை பதில் சொல்ல வைப்பது மக்களிடம் பெரிய தாக்கத்தை உற்சாகத்தை உண்டாக்குது" என்று பாராட்டுவார். 'இன்றைய பிரச்சாரத்தில் வேறு என்ன பாயிண்ட் பேசப் போற..? என்று கேட்டு எனக்குப் புதிதாக நல்ல குறிப்புகளை எடுத்துச் சொல்வார். ஒரு மாபெரும் தலைவர் நான் பேசியதை படித்துவிட்டு அதிகாலையிலேயே போன் செய்து அந்த நாளில் வேறு என்னவெல்லாம் போவேண்டும் என்று குறிப்பெடுத்து எனக்கு சொல்வி உற்சாகப்படுத்துகிறார் என்றால், அவருக்கு கழகத்தின் மீது இருந்த அதீதப் பற்றுபாசத்தினை நினைத் திடுங்கள். கடின உழைப்பால் உயர்ந்து நின்ற தலைவரிடம் மக்களை தன்வசப் படுத்தும் ஆற்றல் பெரிய அளவில் இருந்தது கண்டு நான் மிகவும் வியந்து போனதுண்டு.

பிரச்சார பீரங்கி: பிறகு நடந்த அந்த சட்டமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மறைந்த முரசொலி மாறன் அவர்கள் என்னை தி.மு.க.வின் பிரச்சார பீரங்கி' என்று சொன்னார். நுறைமுகம் தொகுதியில் கலைஞர் அவர்கள் இருந்த மேடையில் மிகத் துணிச்சலோடு என் அரசியல் பேச்சைத் தொடங்கினேன். 'அருமையாக இருந்தது உன் பேச்சு' என்று அந்த மேடையிலேயே என்னைக் கைகுலுக்கி பாராட்டினார் டாக்டர் கலைஞர்! 'துறைமுகம் தொகுதியில் இருந்து ராதிகாவின் பிரச்சாரக் கப்பல் புறப்பட்டுவிட்டது" என்றும் அன்று கலைஞர் சொன்னார்! 'ஒரு தமிழன் நான் இந்த நாட்டை ஆள வேண்டும்! மக்களே தமிழர்களின் நெஞ்சாங்களில் வாழும் டாக்டர் கலைஞருக்கு ஓட்டு போடுங்கள்! தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்று அன்று மேடைகளில் முழங்கினேன்! அதைப் பார்த்து கலைஞர் அகம் மகிழ்ந்து போனார்!.

பசி மயக்கம்: ஒரு முறை திண்டுக்கல்லில் திமுக பிரச்சாரம். மேடையில் பேசிவிட்டு வேனில் ஏறி நின்ற படி மக்கள் மத்தியில் மிதந்தபடி போது அதிகாலை 2 மணி பசி மயக்கத்தில் அப்படியே சாய்ந்து வேனுக்குள் விழுந்தேன். உடனே மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். என்னுடன் கலைஞர் மகள் செல்வியும் உடனிருந்தார். துடிதுடித்துப் போனார். இந்த செய்தி மேட்டூர் வைகை விருந்தினர் மாளிகையில் இருந்த தலைவர் கலைஞருக்கு தெரிந்துவிட்டது? உடனே மருத்துவமனைக்கு போன் செய்து டாக்டர்களிடம் பேசினார். 'இதோ நான் புறப்பட்டு வருகிறேன் என்று என்னைப் பார்க்கவும் கிளம்பிவிட்டார் கலைஞர்! அரை மயக்கத்தில் இருந்த என்னிடம் உடனடியாக போனில் பேசினார்! 'அதெல்லாம் சரியாகிவிட்டது. நீங்கள் வர
வேண்டாம் அப்பா. உங்கள்பிரச்சாரத்தை தொடருங்கள் என்று சொன்னேன்!, அதன் பிறகுதான் அவர் சமாதானம் ஆனார்!

கலை உலகம்: கலை உலகைப் பொறுத்தவரையில், கலைஞர் அவர்களோடு எனக்கு நீண்ட அனுபவம் உண்டு தென்றல் சுடும் என்ற எங்கள் குடும்ப நண்பர் எடுத்த படத்துக்கு தலைவர்தான் வசனம் எழுதினார். முதல் நாள் படப்பிடிப்பையும் ஏ.வி.எம்.மில் அவர்தான் தொடங்கிவைத்தார். கலைஞர் அவர்கள் வசனம் எழுதிய பாசப்பறவை கள் உள்பட பல படங்களில் நான் நடித்தி குக்கிறேன். அதில் வரும் கோர்ட் சீனில் B பக்கம்கொண்ட வசனத்தை ஒரே டேக்கில் நான் பேசி நடித்து அவரிடம் பாராட்டு பெற்றதை நினைத்தால் இன்றளவும் எனதுள்ளம் மகிழ்கிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள் தலைவர் கலைஞரை நினைத்தால் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. அத்துனையும் எழுதினால் ஏட்டில் அடங்காது பாசமிகு தலைவரை..! பண்பாடு காத்த தலைவரை.. ஆற்றல் மிக்க தலைவரை! ஆளுமைமிக்க தலைவரை! தமிழாய்ந்த தலைவரை! கலை உலகின் தலைமகனாரை இனி நாம் காணப்போவதில்லை! இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+