நான் பார்த்த முதல் முகம் நீ! சூப்பர் வீடியோ மூலம் அன்னையர் தின வாழ்த்து கூறிய நடிகை ராதிகா
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி நடிகை ராதிகா ஒரு வீடியோவை வெளியிட்டு தனது தாய்க்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மே 12 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.

அம்மா என்றாலே அன்பும் தியாகமும்தான். எத்தனை டெக்னாலஜிகள் வந்தாலும் அப்பாவிடம் பேச தயங்கும் பல்வேறு விஷயங்களை தாயிடம் சொல்லி தூது அனுப்புவது இன்றளவும் தொடர்கிறது. இந்த நாளில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அது போல் பலர் தங்களது தாய்க்கு வாழ்த்துகளை சொல்வதும், அவருக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
எத்தனை பிள்ளைகளை பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே விதமான அன்பை பகிர்கிறார் அந்த தாய். தான் பெற்ற பிள்ளைகளில் ஏழையோ பணக்காரனோ எப்படியிருந்தாலும் ஒரே மாதிரியான பாசத்தை பொழிபவள்தான் தாய்.
தாய் அன்பிற்கே ஈடேதம்மா!
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது.....
இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய தாயின் புகைப்படங்கள், தனது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ, என்ற பாடல் ஒளிக்கிறது. தனது பதிவில் ராதிகா கூறியிருப்பதாவது: தன்னலம் கருதாமல் இருக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். இத்தனை நாட்கள் அறியாத பலங்களையும் அச்சங்களை கையாள்வதையும் நமக்கு உணர்த்துபவள் தாய் என ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பன்முகத் திறமைகளுடன் இருப்பவர் நடிகை ராதிகா. இவரது தந்தை எம்.ஆர்.ராதா. இவர் 1950- 1960 ஆம் ஆண்டு கால கட்டங்களில் மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வை தனது நடிப்பின் மூலம் ஏற்படுத்தியவர். ராதிகாவின் அம்மா கீதா, இலங்கையைச் சேர்ந்தவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications