“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகவா லாரன்ஸ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை, வேண்டுமென்றே நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர் என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு யூகங்கள் பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நான் அரசியலில் வர வேண்டுமா ? இல்லையா ? என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும். அவர்களின் கருத்துகளை கேட்டு என் முடிவை நான் அறிவிப்பேன் எனத் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence Denies Comparing People to Stray Dogs

அதைத்தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தான் மக்கள் கருத்தை கேட்டு நல்ல முடிவை எடுத்துள்ளேன். விரைவில் அந்த முடிவை அறிவிப்பேன் என செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராகவா லாரன்ஸ். அப்போது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராகவா லாரன்ஸ், என்னைப் பொறுத்தவரை தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது. அவர்களுக்கு சில காலம் டைம் கொடுக்க வேண்டும் என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது லாரன்ஸ் பேசிய ஒரு விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. அவர் பேசும்போது, ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும், அசைவம் தான் சாப்பிடும். அதற்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள்.

மாற்றம் வேண்டும் என நினைத்து அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மாற்றம் வந்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். பாசிட்டிவாக யோசித்து அவர்களுக்கு டைம் கொடுங்க என பேசினார் ராகவா லாரன்ஸ். இந்த பேச்சு தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களை தெரு நாய்களுடன் லாரன்ஸ் ஒப்பிட்டு பேசிவிட்டார் என சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சு குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். "நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை. நான் கூறியதை தவறாக பரப்புகின்றனர். என் ரசிகர்களும் மக்களும் எனது தாய்க்கு சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்." என கூறி விளக்கம் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

மேலும் அவர், "நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும்போது, ​​அந்தச் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், அங்குள்ள நாய்கள், அவற்றின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவை எதை உண்ண விரும்புகின்றன என்பதை அறிந்து கொள்வதற்கும் கூட நேரம் எடுக்கும் என்பதுதான். நான் ஆழமாக மதிக்கும் மற்றும் என் தாய்க்குச் சமமாகக் கருதும் மக்களை 'நாய்கள்' என்று அழைக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தவன் நான் அல்ல.

ஒரு புதிய சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பழகிக்கொள்ள நேரம் தேவைப்படும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, மக்களை எங்கும் அப்படிப்பட்ட வார்த்தைகளால் குறிப்பிடவில்லை. தயவுசெய்து முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி." என விளக்கம் கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+