தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன?
சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக இடைத் தேர்தல் மாறியுள்ளது. குறிப்பாக அனைவரின் கவனமும் திரும்பியுள்ள தொகுதி என்றால் அது திருச்சி கிழக்கு தொகுதிதான். முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த தொகுதி என்பதால், இதில் வெற்றி பெறுவது ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் இது ஒரு கவுரவப் போட்டியாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் பெயர் அரசியல் களத்தில் அடிபட தொடங்கியுள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் அவர் போட்டியிடலாம் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டது என்கின்றனர் தவெகவினர்.
தமிழக அரசியலில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலில் கட்சித் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பின்னர் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
ஆனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு விஜய் கொடுத்த முக்கியத்துவம் ஆரம்பத்திலிருந்தே கவனத்தை ஈர்த்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு நன்றி தெரிவிக்க முதலில் சென்ற தொகுதியும் இதுதான். அந்த மேடையில் பேசிய விஜய், "இந்த தொகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது" என்று கூறியதோடு, இங்குள்ள மக்களிலிருந்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவித்திருந்தார். அதன் பிறகு தவெக வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
ஆரம்பத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயர் அடிபட்டது. பின்னர் திருச்சி அரசியலில் செல்வாக்கு கொண்ட சில உள்ளூர் தலைவர்களின் பெயர்களும் பேசப்பட்டன. அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பெயரும் ஒரு கட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
ராகவா லாரன்ஸ்
இந்த நிலையில் தான் ராகவா லாரன்ஸ் பெயர் திடீரென முதல் இடத்துக்கு வந்துள்ளது. திரைப்பட உலகில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களைக் கொண்ட அவர், சமூக சேவைகளையும் செய்து வருகிறார். நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்வி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு தனி மரியாதை உள்ளது. மேலும், விஜயுடன் நீண்டகால நட்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் விளக்கம்
ஏற்கனவே நடிகர் ஸ்ரீநாத்துக்கு அரசியலில் வாய்ப்பு அளித்து, அமைச்சரவையிலும் இடம் வழங்கியிருக்கும் விஜய், லாரன்ஸுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்றுள்ளது.இதற்கிடையில், சமூக வலைதளத்தில் லாரன்ஸ் வெளியிட்ட பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலில் குதிப்பதாக தன்னைப் பற்றிய செய்திகள் அதிகமாக பரவி வருவதாகவும், அதுகுறித்து விரைவில் விளக்கம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தாயின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையின் முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தவெக வேட்பாளர்
இந்த ஒரு வரிதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதா? தவெகவில் இணைவது குறித்ததா? அல்லது திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மறுபுறம், லாரன்ஸ் நீண்டகாலமாக நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார். எனவே அவர் நேரடியாக விஜய் தலைமையிலான கட்சியில் இணைய வாய்ப்பு குறைவு என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக அரசு
இருப்பினும் இதுவரை எந்த தகவலையும் லாரன்ஸ் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தவெக அரசுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. அதே நேரத்தில், ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அளவிடும் தேர்தலாகவும் இது பார்க்கப்படுகிறது.
விஜய் திட்டம்
இதனால் எதிர்க்கட்சிகளும் இந்த தொகுதியில் வெற்றி பெற தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே வேட்பாளர் தேர்வில் தவெக தலைமை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள முகத்தையே களமிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications