ஆரம்பமே அதிரடி.. ராகுலும் - ஸ்டாலினும் கோவையில், ஒரே மேடையில்.. பாஜக பார்க்குதே.. கோயம்புத்தூர் பரபர
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஒரே மேடையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இன்று கோவையில் ஆதரவு திரட்டி வருகின்றனர். கோவை செட்டிப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் எம்பி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது... அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி: அந்தவகையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்குகிறார்.. இதற்காகவே, திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய போகிறார்..
பிரச்சாரம்: அதேபோல, திமுக அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினும், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார்கள்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். இதேபோல் ராகுல்காந்தியும் நெல்லை பிரச்சாரத்தை
முடித்துக்கொண்டு கோவைக்கு வந்தனர்..

2 தலைவர்கள்: தொடர்ந்து 2 தலைவர்களும், கோவை எல்.அண்ட்டி சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவையும் திரட்டி வருகின்றனர். முதலில் ராகுல் காந்தி முன்னிலையில் ஸ்டாலின் உரையை தொடங்கி உள்ளார். அதன்பிறகு ராகுல் காந்தி பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 12 சட்டசபை தொகுதிகளிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்..
முதல்வர் ஸ்டாலின், எம்.பி. ராகுல்காந்தியின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
பிளான்: பிரதமர் மோடி கோவையில் மோடி ரோடு ஷோ நடத்தி முடித்துள்ள நிலையில், இன்று ராகுலும், ஸ்டாலினும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளைவிட, ஸ்டாலின் - ராகுல் காந்தி பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சி பேசப்பட வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணி தரப்பு திட்டமிட்டு அதனை செயல்படுத்தி உள்ளது. அதுவும் 2 தலைவர்களுமே ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய போவது, இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications