தவெகவை கலைத்துவிட்டு.. காங்கிரசில் இணையுங்கள்.. விஜய்க்கு ராகுல் பிரஷர்? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு அரசியல் அளவில் உதவி செய்ய முடியாது.. வேண்டுமென்றால் உங்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை எங்கள் கட்சியுடன் இணைத்துவிடுங்கள் என்று விஜய்க்கு ராகுல் காந்தி தொடர்ந்து பிரஷர் போட்டு வருகிறாராம்.

கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மீது கோர்ட் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஆதவ் அர்ஜுனா மீது ஆக்சன் எடுக்க வேண்டும். அவர் செய்தது தவறு. அவரை பற்றி விசாரிக்க வேண்டும். அவரின் போஸ்ட் பற்றி விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தனர்.

TVK Vijay

இன்னொரு பக்கம் விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் வாகனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஆனால் இன்று வரை விஜய் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதியப்பட்டதே ஒழிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் போலீசால் கைது செய்யப்படவில்லை. தனிப்படை அவரை நெருங்கியதாக கூட தெரியவில்லை.

தமிழக அரசு அலட்சியம்?

விஜய் விஷயத்தில் தமிழக அரசு கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது. அதாவது விஜய் மீது நேரடியாக அழுத்தத்தை போடாமல் தமிழக அரசு கொஞ்சம் மெத்தனமாக இருக்கிறது. இதற்கு பின் ராகுல் காந்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக ராகுல் காந்தி வழியாக விஜய் முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளாராம். அவர் ராகுல் காந்தியிடம் சிலர் வழியாக பேசி உள்ளார். அதில்.. எனக்கு உங்கள் உதவி வேண்டும்.. என்னுடைய பெயர் FIRல் வரக்கூடாது. நிலைமை கைமீறி சென்றுவிட்டது. ஸ்டாலினிடம் பேசுங்கள்.. இதை சரி செய்ய வேண்டும்.. அதற்கான உதவிகளை செய்யுங்கள், என்று ராகுல் காந்தி வழியாக விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால் திமுக தரப்பு சட்டப்படிதான் செல்வோம்.. கட்சி பொதுச்செயலாளர் என்ற பெயரில் புஸ்ஸி ஆனந்த் மீது FIR போட்டுள்ளோம்.. சட்டப்படி கோர்ட் சொல்வதையே செய்வோம் என்று உறுதியாக உள்ளதாம்.

ராகுல் காந்தி பிரஷர்

ராகுல் காந்தி சொன்ன காரணத்தினாலேயே விஜய் மீது திமுக அரசு எந்த பெரிய ஆக்சனையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ராகுல் காந்தியோ.. விஜய் வந்தால் தமிழ்நாட்டில் நமக்கு கூட்டணியில் கூடுதல் சீட் கிடைக்கும். இப்போது வாங்குவதை விட 30-40 சீட் கூடுதலாக கேட்கலாம். அதோடு கமலையும் நம் கட்சிக்குள் கொண்டு வர பார்க்கலாம். நம்முடைய கட்சி தமிழ்நாட்டில் பலம் அடையும்.

சிரஞ்சீவி காங்கிரஸ் வந்தது போல இவரை கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இதனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கலைத்துவிட்டு எங்களுடன் சேர்ந்து விடுங்கள் என்று விஜய்க்கு ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

எங்களுடன் வந்துவிடுங்கள்.. பாஜக உடன் கூட்டணி வைத்தால் உங்கள் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும். நீங்கள் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் தனித்துவிடப்படுவீர்கள். உங்களுக்கு இருப்பது கிறிஸ்துவ, இஸ்லாமிய, தலித் வாக்குகள். அது பாஜகவுடன் போனால் இருக்காது. அதனால் எங்களுடன் வாருங்கள். அரசியல் ரீதியாக உங்களுக்கு எதிர்காலம் இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கலைத்துவிட்டு எங்களுடன் சேர்ந்து விடுங்கள் என்று விஜய்க்கு ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+