அஸ்திவாரமே பலமாகுது.. "ராகுலும் - ஸ்டாலினும்".. மொத்த பிளானும் இதுதான்.. செல்வப்பெருந்தகை அதிரடி
சென்னை: தமிழகத்தில் தீவிரமான பிரச்சாரங்கள் நடைபெற்றுவரும்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.. இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் ராகுல்.
தமிழகத்தில் எம்பி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது... அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி: அந்தவகையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்குகிறார்.. இதற்காகவே, திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பொதுக்கூட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை பற்றி சொல்லும்போது, "பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு மாலை 4 மணிக்கு ராகுல்காந்தி வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிறகு, காரில் மேடைக்கு செல்லும்போது "ரோடு ஷோ" நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடல் போன்றது. சிறுசிறு அலைகள்போல, கட்சியில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் பேசித் தீர்த்து விட்டோம்" என்றார்.
அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தியின் வருகை குறித்து, பிரத்யேகமான அறிக்கை ஒன்றையும் செல்வப்பெருந்தகை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறிக்கை : "மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட இந்திய ஒற்றுமைப் பயணம், மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6,500 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட ஒற்றுமை நீதிப் பயணம் ஆகியவற்றை ராகுல் காந்தி மேற்கொண்டார். இதற்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் இன்று (ஏப். 12) மாலை 3 மணிக்கு திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார், தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்.
இடஒதுக்கீடு: பாஜக ஆட்சி அமைத்தது முதல் சமூக நீதியில் அக்கறையின்றியும், இடஒதுக்கீட்டு முறைக்கு மாற்றாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சமூக நீதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
2017-ல் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரம் இடங்கள் பறிபோனதுடன், அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.
இண்டியா கூட்டணி: 2024 தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
எனவே, திருநெல்வேலி, கோவையில் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வர வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications