தேர்தல் களம் அனல் பறக்கிறது… 13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி: சத்தியமூர்த்தி பவனில் அறிவிப்பு

    சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மார்ச் 13-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் ஒருங்னைப்புக்குழு தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

    Rahul Gandhi comes to Tamil Nadu on the 13th Says k.s. Alagiri

    இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமி, செயல் தலைவர்கள் எச் வசந்த குமார், ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார், விஸ்னுபிரசாத், தமிழக பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவெல்ல பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன்,திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, மானிக்தாகூர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசியதாவது: வருகின்ற 13ம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்துவதற்காக ராகுல்காந்தி வருகிறார்.

    பிரச்சாரம் நடத்தப்படும் இடம் எது என்பது நாளை அறிவிக்கப்படும். அதுதான் காங்கிரசின் முதல் கூட்டம். அந்த கூட்டத்தில் வெற்றிகரமாக நடத்த ஆலோசனை நடைபெற்றது என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+