3750 கிமீ.. 150 நாட்கள்.. ராகுல் காந்தியின் பிரம்மாண்ட காங்கிரஸ் யாத்திரை.. வியக்க வைக்கும் தகவல்கள்
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் நடக்க உள்ள பாரத் ஜோடோ யாத்திரை இன்று தொடங்க உள்ளது.
யாத்திரையை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செய்தார். குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது அப்பாவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிளான் என்ன?
இன்று பிற்பகல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் ராகுல் காந்தி செல்கிறார். அதன்பின் அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பிற்பகல் 3 மணிக்கு மரியாதை செய்கிறார். 3.25க்கு விவேகானந்தர் மண்டபத்தில் மரியாதை செய்கிறார். 4 மணி அளவில் காமராஜர் மண்டபத்தில் மரியாதை செய்கிறார். பின்னர் 4.20 மணிக்கு ராகுல் காந்தி காந்தி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு முதல்வர் ஸ்டாலின் 4.20 மணிக்கு வர உள்ளார்.

ஸ்டாலின்
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இன்று கன்னியாகுமரி செல்லும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் மாலை 4.30 மணிக்கு தேசிய கொடியை கொடுத்து யாத்திரையை தொடங்கி வைக்கிறார். அதன்பின் ராகுல் காந்தி 5 மணிக்கு சரியாக 600 மீட்டர் தூரம் பயணம் செய்து பொதுக்கூட்டம் நடக்க உள்ள மேடைக்கு செல்வார். அந்த மேடையில் தொண்டர்கள் இடையே ராகுல் காந்தி உரையாற்றுவார். அதன்பின் சில கிலோ மீட்டர் தூரம் ராகுல் நடப்பார்.

ஓய்வு
பின்னர் இரவு ஓய்வு எடுத்து நாளை காலையில் இருந்து தீவிரமான யாத்திரையை தொடங்குவார்கள். மொத்தமாக 4 நாட்களில் குமரி மாவட்டத்தை கடந்து திருவனந்தபுரத்திற்கு ராகுல் காந்தி செல்வார். தமிழ்நாடு முதல்வர் அல்லாமல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இந்த நிகழ்வில் இன்று கலந்து கொள்ள உள்ளனர். ஸ்டாலின் இன்று ராகுல் காந்திக்கு கொடியை கொடுத்தாலும், அதன்பின் நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்.

எத்தனை பேர்
குமரியில் மட்டும் ராகுல் காந்தி 1 லட்சம் பொதுமக்களை சந்திக்க உள்ளார். அவருடன் 20-30 கிலோ மீட்டர் 50 ஆயிரம் தூரத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் இருப்பார்கள். அதேபோல் 118 இளைஞர்கள் ராகுல் காந்தியுடன் கடைசி வரை பயணம் செய்வார்கள். இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் நாடு முழுக்க இருந்து தயார் செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 பெண்களும் அடக்கம். இவர்கள் எல்லோரும் தங்கவும், தூங்கவும் மொத்தம் 60 கேரவன்கள் சகல வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளன.

எப்படி?
இந்த கேரவன்களில் கழிப்பறை, குளியல் அறை, உறங்கும் அறை இருக்கும், சமையல் அறையும் இதில் உள்ளது. இருந்தாலும் சமையல் செய்ய தனியாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட
மாநிலங்கள் வழியாக காஷ்மீருக்கு இந்த யாத்திரை செல்ல உள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்












Click it and Unblock the Notifications