சக்கர வியூகத்தில் சிக்கிய நாடு! இந்த மூன்றுதான் எல்லாத்துக்கும் காரணம்! ராகுல் காந்தி சரமாரி அட்டாக்
சென்னை: லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் நடப்பாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பட்ஜெட் மீது உரையாற்றிய ராகுல் காந்தி நாடு சக்கர வியூகத்தில் சிக்கிவிட்டது என்று விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆதரவுடன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கிறது. ஆட்சியை அமைத்த பின்னர் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் என்டிஏ கூட்டணியில் மரியாதை கூடியது. இப்படி இருக்கையில்தான் கடந்த 23ம் தேதி நடப்பாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

இதில் பாஜக ஆட்சியமைவதற்கு காரணமாக இருந்த பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இது எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்துக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பிருந்தனர்.
இப்படி இருக்கையில், இன்று பட்ஜெட் மீது ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். இதில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். லோக்சபாவில் அவர் பேசியதாவது, ""பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர். மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவை பிடித்த சக்கரவியூகத்தில் 3 சக்திகள் உள்ளன. அதில் முதலாவது
ஏகபோக மூலதன யோசனை, இரண்டாவது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை. மூன்றாவது இவற்றை இயக்கும் அரசியல் சக்தி. இந்த மூன்றில் இப்போது நாடு சிக்கியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன. ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஏவியுள்ளது மத்திய அரசு" என்று விமர்சித்துள்ளார்.
அப்போது குறிக்கிட்ட சபாநாயகர், ராகுல் காந்தி அவையில் தவறான கருத்துக்களை கூறக்கூடாது என்று அறிவுறுத்தினார். உடனே இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், "மத்திய அமைச்சர்கள் பேசும் போது சபாநாயகர் இந்த அறிவுரையை கூறுவது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது மட்டும் குறுக்கிட்டு அறிவுரை சொல்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications