சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. இன்று இரவுக்குள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தீர்வு எட்டப்படும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ப. சிதம்பரம் மூலம் திமுகவுக்கு ராகுல் காந்தி அனுப்பிய மெசேஜ் குறித்து வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் பனிப்போர் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளது.

ராகுல் பிடிவாதம்
தவெகவுடன் இணைய வேண்டும் என சிலரும், திமுகவுடன் தொடர வேண்டும் என பலரும் காங்கிரஸ் கட்சியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் ப சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுகவுடன் கூட்டணி என்பதில் சோனியா காந்தி உறுதியாக உள்ளார். ஆனால் ராகுல் காந்தி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
36 தொகுதிகள் கறார்
"நாம் கேட்கின்ற தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும்" என்று ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம். திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட் கூட இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளனர். ராகுல் காந்தியோ திமுகவிடம் 36 தொகுதிகளை கேட்டு பெறுங்கள்.
"36 தொகுதிகள் தான் கடைசி கோடு. அதில் இருந்து இறங்கி வர முடியாது" என்று ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளாராம். ஒருவேளை தொகுதியை குறைத்தால் ஒரு ராஜ்யசபாவுக்கு பதிலாக 2 ராஜ்சபா சீட்கள் வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கூறியுள்ளது. திமுகவுடன் பயணிப்பதுதான் நம் கட்சிக்கும் நல்லது. தவெக வை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
சிதம்பரம் மூலம் மெசேஜ்
எனவே நீங்களும் கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என சிதம்பரம் ராகுலுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை ராகுல் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தவெக தரப்பில் 70 தொகுதிகளை தர முன் வந்துள்ளதால் சீட் விஷயத்தில் ராகுல் தன் முடிவை மாற்றக் கொள்ள மறுக்கிறார் என கூறப்படுகிறது.
இதனிடையே இன்று காலை சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதனடிப்படையில் தான் ப. சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தினார். திமுக தலைமை இன்று வரை கெடு விதித்துள்ள நிலையில், ராகுலின் மெசேஜை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொண்டு சென்று சிதம்பரம் தீர்வை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications