சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தொகுதியான அமேதியில் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ராகுல்காந்தி தனது தந்தையின் மக்களவை தொகுதியான அமேதியில் போட்டியிடுவது வழக்கம். அதனால் அத்தொகுதி காங்கிரஸின் கோட்டையாக திகழ்கிறது.

இந்த நிலையில் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வந்தது முதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டார். குறிப்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இயல்பான பேச்சின் மூலம் நல்ல தலைவர் என்ற பெயரை பெற்றார்.

விருப்பம்

விருப்பம்

இந்த நிலையில் தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் உள்ள தலைவர்கள் தங்களின் விருப்பப்படி ராகுல்காந்தி ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர். இதை அவரிடமும் கூறியுள்ளனர்.

<strong>அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல்</strong>அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல்

விருப்பம்

விருப்பம்

தமிழகத்தில் குமரி மற்றும் சிவகங்கை தொகுதியிலும் கேரளத்தில் வயநாடுவிலும், கர்நாடகத்தில் மத்திய பெங்களூரு, பிதார் மற்றும் மைசூரு ஆகிய தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என அந்த மாநில தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

பெல்லாரியில்

பெல்லாரியில்

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும் கர்நாடகத்தில் சிக்மங்கலூரில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார். இது போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பெல்லாரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழகம் விருப்பம்

தமிழகம் விருப்பம்

அது போல் அமேதி மட்டுமல்லாது தென்னிந்தியாவில் மேற்கண்ட ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் தமிழகத்தில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rahul Gandhi is going to contest in South India? Sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X