Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா?
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உலக அரங்கில் இந்தியாவின் ஒரே அரசியல் கட்சி என்ற அடையாளத்துடன் விளங்கியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் 50 ஆண்டுகாலம் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த காங்கிரஸ் கட்சி இப்போது இந்தியா முழுவதும் தனது செல்வாக்கை இழந்து செல்லாக்காசு ஆகிவிட்டதோ என்று நினைப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது எதிர்கட்சியாக கூட இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகள் மத்தியிலும் காங்கிரசுக்கு ஓரளவு மரியாதை இருந்தது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு தேர்தல்களை சந்தித்து வந்தன. ஆனால் இப்போது நிலைமையோ தலைகீழாக மாறி உள்ளது. இந்தியாவின் அடுத்த நம்பிக்கையாக காங்கிரசார் பார்த்தது ராகுல் காந்தியைத் தான். ஆனால் தற்போது ராகுல் காந்தி தமிழக அரசியல் மீது நாட்டம் இல்லாமல் ஏன் கிட்டத்தட்ட வெறுத்துப் போய் உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரம் 2025 ஆம் ஆண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. மத்தியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கத் துணிந்த வெகு சில தலைவர்களுள் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் ஒருவராக பார்க்கப்பட்டார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஆளுமையான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் நெருக்கம் பாராட்டினார்கள்.
காங்கிரஸ் - திமுக இடைவெளி
ஆனால் அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் திமுகவுடன் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதுவும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அந்த இடைவெளி இன்னும் அதிகமாகி விட்டதாகவே தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்காகாந்தி திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குறுக்கே புகுந்து தவெகாவுடன் கூட்டணி அமைப்பதை தடுத்து மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்ததை ராகுல் காந்தி ரசிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தமிழக காங்கிரசை கண்டு கொள்ளாமல் ராகுல் காந்தி அம்போவென விட்டுவிட்டார் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசியலில் ராகுல் காந்தி எந்தவித தலையீடும் செய்யாமல் பாராமுகமாய் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது தமிழகத்திலிருந்து வரும் எந்த மூத்த தலைவர்களையும் ராகுல் காந்தி சந்திப்பதை தவிர்த்து வருகிறார் என்றும், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட தேர்தல் முன்கள பணிகள், தேர்தல் பரப்புரையில் தான் பங்கெடுப்பது பற்றியும் இதுவரை ராகுல் காந்தி வெளிப்படையாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்பது காங்கிரசாரிடையை பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிமணி கருத்து
தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை திமுகவின் கிளை கழக கிளைக் கழகமாகவே மாற்றிவிட்டார்களோ என ராகுல் காந்தி எண்ணுவது தான் இந்த பாராமுகத்திற்கு காரணம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வ பெருந்தகை காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக திமுகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதே ராகுல் காந்தியின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
இதனால் தான் தமிழக காங்கிரஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடாமல் இருக்கிறார் என்றும் அரசியல் விமர்சிகர்கள் கருத்து கூறுகிறார்கள். இதன் வெளிப்பாடாகத்தான் அண்மையில் காங்கிரசின் ராகுல் காந்தியின் அபிமானியான கரூர் எம்பி ஜோதிமணி சமூக வலைதள பக்கத்தில் தற்போதைய காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள் பற்றிய காட்டமான விமர்சனம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
காங்கிரஸ் தலைமையின் அமைதி
ஜோதிமணியின் இந்த காட்டமான விமர்சனம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைமை எந்தவிதமான கருத்து கூறவில்லை. கண்டிக்கவும் இல்லை என்பது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது வைத்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது.
ராகுல் காந்தியின் எண்ணம்
ஆனால் இந்த முறை 28 இடங்கள் அதாவது மூன்று இடங்கள் கூடுதலாக கிடைத்திருந்தாலும் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலை விட அதிகப்படியான தொகுதிகளை திமுக கொடுத்திருந்தாலும் காங்கிரசுக்கு சவாலாக உள்ள தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது என்று காங்கிரஸ் தேசிய தலைமை கருதுகிறது. திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியை பழிவாங்கவே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை குலைக்கவே திமுக தலைமை இந்த முடிவை எடுத்து இருப்பதாக ராகுல் காந்தி நினைப்பதாகவே தெரிகிறது.
பாஜகவுக்கு கொண்டாட்டம்
பாஜகவிற்கு மாற்று சக்தியாக தேசிய தலைமையை தீர்மானிப்பதில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்தான் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால் இப்போது திமுக தலைமைக்கும் காங்கிரசின் தேசிய தலைமைக்கும் ஏற்பட்டுள்ள இந்த பிணக்கு என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். மேலும் ராகுல் காந்தியின் இந்த முடிவால் தமிழக பாஜகவுக்கு தான் கொண்டாட்டம்.
- சிறப்பு நிருபர்
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications