எப்போதுமே "ஓசிதான்.." இனி தவெக முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தின் பாரம்பரிய அரசியல் களத்தையே தலைகீழாக மாற்றியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்தத் தருணத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) மற்றும் ராகுல் காந்தி எடுத்த முடிவானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பவன் கல்யாண் ஆந்திராவில் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக 10 ஆண்டுகள் இடைவிடாமல் களத்தில் நின்றார். ஆனால், ராகுல் காந்தியோ விஜய் தனது பலத்தை நிரூபித்தவுடன் மிக எளிதாக ஆட்சி அதிகாரத்தை சுவைக்க 'துண்டு போட்டு' ஆதரவு அளித்துள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Rahul Gandhi

ராகுல் காந்தியின் அரசியல் கணக்கீடு

காங்கிரஸ் கட்சியின் இந்த அவசர முடிவுக்குப் பின்னால், ராகுல் காந்தியின் மிகத் தெளிவான தேர்தல் கணக்கீடு இருப்பதாக அரசியல் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

திமுகவின் எதிர்காலம் குறித்த சந்தேகம்: கடந்த 22 ஆண்டுகாலமாகத் தமிழகத்தில் திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போது திமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்துள்ளது. மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கூட பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், திமுகவுடன் தொடர்ந்து பயணித்தால் தேசிய அளவில் பின்னடைவு ஏற்படும் என ராகுல் காந்தி கருதுகிறார்.

தவெக முதுகில் சவாரி: விஜய்யின் மாபெரும் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் எளிதாகப் பங்கு (Power Sharing) பெறலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. உழைக்காமல் வெற்றி பெறுபவர்களுடன் கை கோர்ப்பது காங்கிரஸின் சோம்பேறித்தனமான அணுகுமுறை என விமர்சனங்கள் எழுகின்றன.

6 எம்எல்ஏக்கள் தேடும் தவெகவின் நிலை

காங்கிரஸ் 5 இடங்களுடன் நிபந்தனை ஆதரவு கொடுத்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 பலத்தை எட்ட இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்குத் தேவைப்படுகிறது.

தவெகவின் தற்போதைய பலம்: 107 (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில்)

காங்கிரஸ் பலம்: 5

கூட்டணி பலம்: 112

இந்தச் சூழலில், இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்ட தவெக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

சோம்பேறித்தன அரசியலா அல்லது ராஜதந்திரமா?

களத்தில் இறங்கி அடிபடாமல், மக்களின் ஆதரவு கிடைத்ததும் லாபம் பார்க்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடு, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் இந்த சவாரி வியூகம் தேசிய அளவில் எந்தளவுக்கு அந்த கட்சி நம்பகத்தன்மையை சிதை்ககும் நிலைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+