ஒரு யுகம்! 19 வருடங்களுக்கு பின்.. அப்பா நினைவிடத்தில் கண்களை மூடி அமர்ந்த ராகுல் காந்தி! நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று ராகுல் காந்தி மரியாதை செய்த பின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கேயே அமர்ந்து தியானம் செய்தார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் இன்று பாரத் ஜோடோ யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரையில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ராகுல் காந்தி சென்னை வந்தார்.

இன்று பிற்பகல் விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்கிறார்.

மாலை 5 மணிக்கு ராகுல் காந்தி யாத்திரையை தொடங்க உள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை பயணம்' எனும் பெயரில் இந்த நீண்ட யாத்திரை நடத்தப்பட உள்ளது. 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது அப்பாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று ராகுல் காந்தி மரியாதை செய்த பின், நினைவிடத்தை ஒரு முறை சுற்றினார். சரியாக 19 வருடங்களுக்கு பிறகு ராகுல் காந்தி இந்த நினைவிடம் வருகிறார். 2003ல் இந்த நினைவிடம் திறக்கப்பட்டது. நினைவிடம் திறக்கப்பட்ட போது ராகுல் காந்தி அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பின் ராகுல் காந்தி இங்கே வரவே இல்லை. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து ராகுல் இங்கே வந்து மரியாதை செய்தார்.

மரியாதை

மரியாதை

நினைவிடத்தை சுற்றிய பின் அங்கேயே அமர்ந்து ராகுல் காந்தி தியானம் செய்தார். அமைதியாக கண்களை மூடி தியானம் செய்தார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள், கர்நாடகாவை சேர்ந்த டிகே சிவக்குமார் உள்ளிட்ட மற்ற மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இங்கே ராகுலுடன் சேர்ந்து அமர்ந்து தியானம் செய்தனர். ராகுல் காந்தி மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்தபடி ராகுல் காந்தி தியானம் மேற்கொண்டார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

அதன்பின் அங்கே ராகுல் காந்தி சார்பாக மரக்கன்று நடப்பட்டது. ராகுல் காந்தி சார்பாக அங்கு அரசமரம் நடப்பட்டது. அதன்பின்பாக ராஜீவ் காந்தி படுகொலையில் உயிர்நீத்த நபர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு நடத்தினார். அவர்களுடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+