கட்சிய வளர்த்த லட்சணம் இதுதானா? தமிழக கதர்களால் கடுப்பான ராகுல் காந்தி! இனி கடிவாளம் டெல்லி கையில்!
சென்னை: ராகுல் காந்தி, இனி தமிழ்நாடு அரசியலில் நேரடியாக தலையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி அரசியல், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளிலும் ராகுல் காந்தியே நேரடியாக களமிறங்க உள்ளார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பழமையான தேசிய கட்சியான காங்கிரஸ், பல மாநிலங்களில் ஆட்சி அமைத்தும், பல மாநிலங்களில் வலுவான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலை 60 ஆண்டுகளில் மோசமாகவே உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு முக்கிய தேசிய கட்சியாக இடம்பிடித்திருந்தாலும், திமுகவின் ஆதரவால்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் வெற்றி பெறுகிறது என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசியல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி
இந்த சந்திப்பு சாதாரண ஆலோசனை கூட்டமாக இல்லாமல், தமிழக காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்ட ஒரு "ஆபரேசன் மீட்டிங்" ஆகவே மாறியதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் போது ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். "கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி போன்ற தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் காங்கிரஸ் வளரவில்லை? கடந்த ஆண்டுகளில் எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கட்சியை வளர்க்க என்ன செய்துள்ளீர்கள்?" என நேரடியாக கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
இந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தாலும், அந்த பதில்கள் ராகுல் காந்திக்கு திருப்தியளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் காங்கிரஸ் எம்பியிடம், அவரது தொகுதியில் உள்ள பூத் ஏஜெண்ட்கள், பூத் கமிட்டிகள் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியபோது, அவர் தெளிவான பதில் அளிக்கத் தவறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக ஆட்சி
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ் என்பதும், தமிழ்நாட்டில் கடைசியாக முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம் என்பதும் அனைவரும் அறிந்ததே. 1967-ம் ஆண்டுக்குப் பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியதுடன், அதன் பின்னர் திமுக - அதிமுக மாறிமாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. அந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் தனிப்பட்ட அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் வளரத் தவறியதே இன்றைய நிலைக்கு காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்டுப்பாடு
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ந்த அளவுக்கு கூட காங்கிரஸ் வளரவில்லை என்பதும், உட்கட்சி பூசல் தான் காங்கிரசின் சரிவுக்கு முக்கிய காரணம் என்பதும் காங்கிரஸ் வட்டாரங்களே ஒப்புக்கொள்ளும் உண்மையாக உள்ளது. மாநில தலைமையில் இருந்து அடிமட்ட நிர்வாகம் வரை நீண்ட காலமாக நிலவி வரும் உட்கட்சி மோதல்களே கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை குறித்து தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ள ராகுல் காந்தி, இனி தமிழ்நாடு அரசியலில் நேரடியாக தலையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி அரசியல் தொகுதி பங்கீடு
கூட்டணி அரசியல், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளிலும் ராகுல் காந்தியே நேரடியாக களமிறங்க உள்ளார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான ஆரம்ப கட்டமாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பட்டியல் முழுமையாக ராகுல் காந்தியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகே இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில், சுமார் 70 மாவட்டத் தலைவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு காங்கிரசின் கடிவாளம் முழுவதும் ராகுல் காந்தியின் கைகளில்தான் இருக்கும் என்றும், 2026 தேர்தலைக் குறிவைத்து அவர் நேரடியாக அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு!












Click it and Unblock the Notifications