Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே 21-ல் ராகுல் தமிழ்நாடு வருகை-ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிட அஞ்சலியில் பங்கேற்பு: கே.எஸ்.அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் (மே 21) தமிழ்நாடு வருகை தர உள்ளார்; ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பங்கேற்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது: இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராகவும், பாரதப் பிரதமராகவும் பொறுப்பேற்று உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21 ஆம் தேதி காலை 8.00 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார்.

Rahul Gandhi to visit Rajiv Gandhis memorial in Sriperumbudur: KS Alagiri

கர்நாடகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வருகை புரிவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி மேற்கொண்ட வகுப்புவாத, அவதூறு பிரச்சாரத்தை முறியடித்ததில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கர்நாடகத்தில் அவர் பாத யாத்திரை மேற்கொண்ட பாதையில் அமைந்துள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளில் 37 இல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிற ஆட்சி மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுகிற பேராற்றலும், வல்லமையும் மிக்க தலைவராக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். இதன்மூலம், இந்தியாவில் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு தலைவர் ராகுல்காந்தி மே 21 அன்று காலை வருகை புரிகிற போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+