தட்கலில் டிக்கெட் ரிசர்வேஷன்.. முன்பதிவு குறித்து ரயில்வே சொல்வதென்ன? ஆதார் நம்பர் இணைக்கணுமா? சபாஷ்
சென்னை: தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம், அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து, 5 கோடி பயனாளர்களுக்கு, மெயில் வாயிலாக, ஐஆர்டிசிடிசி தகவல் அனுப்பி வருகிறது. எதற்காக இந்தியன் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை அறிவித்துள்ளது தெரியுமா?
ஐஆர்சிடிசி எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் பயணத்துக்கு முன்பு ரிசர்வ் செய்வது தட்கல் என்பார்கள்.

தட்கல் புக்கிங்
இந்த தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்ய முற்பட்டாலும், அனைவருக்குமே டிக்கெட்டுகள் கிடைத்து விடுவதில்லை. பயணிகளின் விவரங்களை நிரப்பி முடிப்பதற்கே நேரம் போதவில்லை.. அந்த விவரங்களை நிரப்பி முடிப்பதற்குள், அடுத்துள்ளவர்கள் டிக்கெட்டை எடுத்துவிடுவார்கள். அப்படியே அவசரமாக விவரங்களை நிரப்பிவிட்டாலும், பணம் செலுத்துவதில் நேரம் விரயமாகிறது.
அதுமட்டுமல்ல, சிலசமயம், சர்வர்' முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவேதான் இந்த சிக்கலை பயன்படுத்தி, ஏஜன்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது..
அவசரத்துக்கு டிக்கெட்
இவர்களிடம் பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க நேரிடுகிறது.. இதில், பலரும் போலி கணக்குகளை துவங்கி, தட்கல் டிக்கெட்டுகளை ஏஜன்ட்டுகள் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை இந்தியன் ரயில்வே முடக்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், வருகிற 1-ந் தேதி முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.. இதற்காக, IRCTC ஆன்லைன் கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
ஒவ்வொருவருக்கும் இ-மெயில்
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளது. அதன்படி, "ஐஆர்சிடிசி இணையதள கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று 'மை அக்கவுன்ட்' என்ற தலைப்பின் கீழ் இருக்கும் 'ஆத்தென்டிகேட் யூசர்' (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்
அப்படி பதிவு செய்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்ததும் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும்.
ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications