ரயில்ஒன் ஆப்பில் குளறுபடி.. ரயிலில் ஏறிய பிறகும் டிக்கெட் எடுக்க முடியுதாம்! ஓசி பயணம் அதிகரிப்பு
சென்னை: ரயில் ஒன் செயலியில் மேஜர் தொழில் நுட்ப கோளாறு ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ரயில் நிலையத்தில் இருந்து 30 முதல் 50 மீட்டர் தொலைவில் இருந்தால்தான் டிக்கெட் எடுக்க முடியும். ஓடும் ரயிலில் இருந்த படியோ, தண்டவாளத்திற்கு அருகில் நின்றோ டிக்கெட் புக் செய்ய முடியாது.
ஆனால் இந்த ரயில் ஒன் ஆப்பில் சில லூப் போல் இருப்பதை கண்டறிந்த பயணிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட் எடுக்காமலே பயணித்து வருகிறார்களாம். ரயிலுக்குள் டிடிஆரை பார்த்த பிறகே பலரும் அவசர அவசரமாக புக் செய்து அபராதத்தில் இருந்து தப்பவும் செய்து விடுகிறார்களாம்.
{image-c-2026-04-13t142555-948-1776070606.jpg tamil.oneindia.com
ரயில்ஒன் செயலியில் குளறுபடி
இந்தியாவில் ரயில்களில் பயணிகள் மத்தியில் ஆன்லைன் வழியாக டிக்கெட் புக் செய்யும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டு ஐஆர்சிடிசியும் டிக்கெட் புக்கிங்கிற்க்கு செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் கொண்டு வரும் விதமாக ரயில் ஒன் என்ற சூப்பர் ஆப் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியில் முன்பதிவு டிக்கெட் மட்டும் இன்றி, அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், ரயில்வே தொடர்பான புகார்கள், ரயில் டிராக்கிங் என அனைத்து வகையான சேவைகளையும் பெற முடியும். கடந்த மார்ச் மாதம் வரை அன் ரிசர்வ்டு டிக்கெட்டுகளுக்காக யுடிஎஸ் என்ற செயலி நடைமுறையில் இருந்தது. இந்த செயலியின் சேவையை கடந்த மாதத்தோடு நிறுத்திய ரயில்வே, இனி அனைத்து டிக்கெட்டுகளையும் ரயில் ஒன் செயலியில் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. சரி இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது..
ரயிலில் இருந்தே டிக்கெட் புக்கிங்
பிரச்சினை என்னவென்றால், ரயில் ஒன் செயலியில் மேஜர் தொழில் நுட்ப கோளாறு ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ரயில்ல் நிலையத்தில் இருந்து 30 முதல் 50 மீட்டர் தொலைவில் இருந்தால்தான் டிக்கெட் எடுக்க முடியும். ஓடும் ரயிலில் இருந்த படியோ, தண்டவாளத்திற்கு அருகில் நின்றோ டிக்கெட் புக் செய்ய முடியாது.
இதற்காக ஜியோ ஃபென்சிங் என்ற தொழில் நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வரும் முன்னே டிக்கெட் புக் செய்து இருப்பது உறுதி செய்யப்படும். ஆனால், இந்த ரயில் ஒன் ஆப்பில் சில லூப் போல் இருப்பதை கண்டறிந்த பயணிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட் எடுக்காமலே பயணிக்கிறார்களாம். ரயிலுக்குள் டிடிஆரை பார்த்த பிறகே பலரும் அவசர அவசரமாக புக் செய்து அபராதத்தில் இருந்து தப்பவும் செய்து விடுகிறார்கள்.
பயணிகள் சொல்வது என்ன?
மும்பையில் ஓடும் புறநகர் ஏசி ரயில்களில் பெரும்பாலான பயணிகள் இப்படி டிக்கெட் இன்றி பயணிப்பதாகவும் டிடிஆரை பார்த்ததும் டிக்கெட் புக் செய்துவிடுவதாகவும் பயணிகள் பலரும் தெரிவித்துள்ளனர். ரயில்வே இந்த பிரச்சனையை விரைவாக சீர் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால், பெரும் நஷ்டத்தை ரயில்வே சந்திக்கும் எனவும் பயணிகள் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறும் போது, ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் நின்றபடியே டிக்கெட் எடுக்க முடியும் நிலை உள்ளது. ரயில் புறப்பட்டு சென்றால், ரயிலுக்குள் இருந்து டிக்கெட் புக்கிங் ஆவது இல்லை. ஆனால் பிளாட்பார்மில் நிற்கும் போது டிக்கெட் போட முடிகிறது என்றும் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications