இன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி.. தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையில் இன்று முதல் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் காலை மற்றும் மாலையில் முக்கியமான நேரங்களில் பயணிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு ரயில்வே தினசரி 244 சென்னை புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கப்படுகிறது. இது கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட ரயில்களில் ஏறக்குறைய 40% இயக்கப்படுகிறது.

இன்று முதல் அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள்முழுவதும் பயணிக்கலாம்.
சாதாரண நேரங்கள் என்பது காலை 7 வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாலை 7.30 மணிக்கு பிற்பாடு உள்ள நேரங்கள் ஆகும். இந்த நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம். இந்த குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணிகள் சிறப்பு ரயிலில் பயணிக்கலாம்.
அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications