கவரப்பேட்டையில் தண்டவாள போல்ட், நட்டுகள் கழன்றது எப்படி? 10 ஊழியர்களுக்கு ரயில்வே போலீசார் சம்மன்!
சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க மேலும் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிக்னல் பிரிவு, என்ஜினியர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பணியாளர்கள் 16 பேருக்கு சம்மன் அளித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 75 கி.மீ வேகத்தில் வந்த ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன.

இந்த விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தின் குறுக்கே சிதறிக் கிடந்த ரயில் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றினர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் பாதை சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்து தற்போது ரயில்கள் இயங்கி வருகின்றன.
யில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, லூப் லைனில் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 16 ரயில்வே அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க மேலும் 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிக்னல் பிரிவு, என்ஜினியர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் போல்ட், நட்டுகள் கழன்ற நிலையில் பறிமுதல் செய்யப்பட்டதால் அதுகுறித்து விசாரிக்கப்ப்டும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே பணியாளர்கள் 16 பேருக்கு சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் 10 பேரிடம் விசாரிக்க உள்ளனர்.
கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் முனிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இரவு 8.29 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முதல் தகவல் அறிக்கையில், பிரிவு 281 (ரயிலை வேகமாக இயக்குதல், கவனக்குறைவாக செயல்படுதல்), பிரிவு 125 பி (கடுமையான காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்), ரயில்வே சட்டம் 281 (ரயில் பயணிகளுக்கு ஆபத்தான வகையில் செயல்படுதல் மற்றும் வேகமாக செயல்படுதல்) ஆகிய 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications