கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கத்திற்கு சர்ப்ரைஸ்.. தாம்பரத்தில் இருந்து நாளை மூன்று சிறப்பு ரயில்கள்
சென்னை: ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி பலரும் நாளை (செப்டம்பர் 30) சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார்கள்... எனவே கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூரில் ரயில் ஏறும் பயணிகளின் வசதிக்கா , தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு நாளை இரவு 7.42, 7.53, 8.10 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. . அதேபோல் ஆயுதப் பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையும் நாளை மறுநாள் தொடங்கி வருகிறது. பொதுவாகவே காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை பண்டிகை காலங்களில் மக்கள் ஊருக்கு செல்வது வழக்கம் , இந்த முறை வழக்கத்தைவிட வித்தியாசமாக இரண்டும் ஒன்றாக வந்துள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். செப்டம்பர் 30ம் தேதியான நாளை தான்பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரே நேரத்தில் நாளை இரவு லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் பேருந்து மூலமாக சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளார்கள். எனவே அவர்கள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்ய சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். சிலர் ஆம்னி பேருந்துகளில் ஏறுவதற்கு பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரியை பயன்படுத்துவார்கள்.
ஏனெனில் இரண்டுமே ரயில் நிலையத்தின் எதிரே உள்ளது. அதேபோல் கிளாம்பாக்கம் செல்பவர்கள், வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்வார்கள். இப்படி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரயில்கள் செப்டம்பர் 30ம் தேதி இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு நாளை இரவு 7.42, 7.53, 8.10 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வெறும் 20 நிமிடத்தில் கூடுவாஞ்சேரிக்கு ரயில்கள் சென்றுவிடும். பொதுவாக கிளாம்பாக்கத்தில் முன்பதிவு செய்தவர்கள் கூடுவாஞ்சேரியில் ஏறிக்கொள்ள முடியும். கூடுவாஞ்சேரியில் இருந்து சிறிது தூரம் நடந்து வந்தாலே மெயின்ரோடு வந்துவிடலாம். அப்படியே பேருந்த டிரைவர் அல்லது நடத்துனரை அழைத்து தெரிவித்துவிட்டு கூடுவாஞ்சேரியிலேயே ஏறிக்கொள்ள முடியும்.
எனவே இந்த சிறப்பு ரயில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் மற்ற நேரங்களிலும் ரயில்கள் உள்ளன. மின்சார ரயில்கள் பீக் அவர்ஸ்களில் ஓரளவிற்கு செங்கல்பட்டு வரை இருக்கின்றன. எனவே ரயில்களில் ஏறி எளிதாக கிளாபாக்கம் வந்துவிட முடியும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரியில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொங்கலுக்கு பயணிகள் செல்ல கிளாம்பாக்கம் ரயில் வசதியாக இருந்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications