மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காத ரயில் தண்டவாளங்கள்.. இந்தியன் ரயில்வே சுவாரஸ்ய அறிவியல் பின்னணி
சென்னை: இந்திய ரயில்வே குறித்து பலருக்குத் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள் நிறையவே உள்ளன.. அதில் ஒன்றுதான் ரயில் தண்டவாளங்கள் தொடர்பான விஷயம்.. பொதுவாக இரும்புப் பொருட்கள் காலப்போக்கில் துருப்பிடிப்பது என்பது இயல்பான ஒன்று.. அப்படியிருக்க, கோடிக்கணக்கான டன் எடையுள்ள ரயில்கள் தினமும் ஓடும் தண்டவாளங்களில் துரு என்பது பெரிதாக தெரியாதது ஏன்? ரயில் தண்டவாளங்கள் துருப்பிடிக்காதது போல தோன்றுவதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று நீங்கள் ஒருபோதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
ரயில் பாதை தொடர்பான உண்மைகள் பல பேருக்கு முழுமையாகத் தெரியாது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. ரயில் சூப்பரான முறையில் நகர்வதால் பயணிகள் சோர்வடைவதில்லை..

ரயில் தண்டவாளங்கள்
ஆனால், ரயில் ஓடும் தண்டவாளங்கள் இரும்பினால் செய்யப்பட்டவை என்பதையும், அந்த இரும்பு வெயிலிலும் மழையிலும் இருக்கும்போது பொதுவாக துருப்பிடிக்கும் என்பதையும் நாம் அறிவோம்.. இருந்தாலும், நடைமுறையில் ரயில் தண்டவாளங்களில் துரு தென்படுவதில்லை.. இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் உண்மை..
பொதுவாக இரும்பு நீண்ட காலம் வெளிப்புற சூழலில் இருந்தால் துருப்பிடிப்பது இயல்பான ஒன்று.. ஆனால் ரயில் தண்டவாளங்கள் தினமும் வெயில், மழை, காற்று போன்ற இயற்கை மாற்றங்களைச் சந்தித்தாலும் அவற்றில் துரு என்பது பெரிதாக உருவாவதில்லை..
சாதாரண இரும்பு பராமரிப்பு
இதற்கு முக்கிய காரணம், தண்டவாளங்கள் தயாரிக்கப்படும் சிறப்பு கலவை எஃகு ஆகும்.. இந்த எஃகில் கார்பன் உள்ளிட்ட சில தனிமங்கள் சேர்க்கப்படுவதால், அது சாதாரண இரும்பைப் போல அவ்வளவு சீக்கிரம் துருப்பிடிக்காது.. மேலும், ரயில்வே துறையினர் தண்டவாளங்களை சூப்பரான முறையில் பராமரித்து வருகிறார்கள்.. அடிக்கடி எண்ணெய் பூசுதல், பாதுகாப்பு பூச்சுகள் பயன்படுத்துதல், பழைய தண்டவாளங்களை மாற்றுவது போன்ற வேலைகள் செய்யப்படுகின்றன..
அத்துடன், ரயில்கள் தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் உராய்வு கூட, துரு படியாமல் தடுக்கும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.. இதன் காரணமாகவே, ரயில் தண்டவாளங்கள் நிறைய வருஷம் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் செயல்பட்டு வருகின்றன.
காஸ்ட்லி எஃக்
அதுமட்டுமல்ல, தண்டவாளங்கள் இரும்பால் செய்யப்பட்டவை என்றாலும், அவற்றில் பயன்படுத்தப்படும் எஃகு சாதாரணமானது அல்ல.. உயர்தர எஃகே ரயில் தண்டவாளங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.. இதில் சுமார் 1 சதவீதம் கார்பன் மற்றும் 12 சதவீதம் மாங்கனீசு கலந்துள்ளது.. இந்த தனிப்பட்ட கலவையால் உருவாகும் எஃகு "C-Mn ரயில் எஃகு" என்று சொல்லப்படுகிறது.. இந்த அமைப்பின் காரணமாகவே தண்டவாளங்களில் துருப்பிடிப்பு என்பது ரொம்பவே குறைவாக இருக்கும்..
இந்திய ரயில்வே தண்டவாளங்கள் இரும்பால் ஆனவை என்றாலும், அவை சாதாரண இரும்பு அல்ல.. உயர்தர எஃகில் தயாரிக்கப்படுவதால் துருப்பிடிப்பு மிகக் குறைவாக இருக்கும்..
இதில் கார்பன் மற்றும் மாங்கனீசு போன்ற கலவைகள் சேர்க்கப்படுவதால், எஃகின் வலிமை மற்றும் நீடித்த தன்மை அதிகரிக்கிறது.. மேலும், ரயில்கள் தொடர்ந்து தண்டவாளத்தின் மேல் ஓடுவதால், சக்கரங்களின் அழுத்தம் காரணமாக தண்டவாள மேற்பரப்பு தானாகவே மெருகேறுகிறது.. இதனால் ஈரப்பதம் நீண்ட நேரம் ஒட்டிக்கொள்ள முடியாது.. இதுவே தண்டவாளங்கள் விரைவில் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக நிபுணர்கள் சொல்கிறார்கள்..
டெக்னிக்கல் காரணங்கள்
இந்திய ரயில்வே தண்டவாளங்கள் துருப்பிடிக்காமல் நீடித்துப் பயன்படுவதற்கு நிறைய தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன.. தண்டவாளங்கள் சாதாரண இரும்பால் அல்ல, உயர்தர C-Mn எஃகால் தயாரிக்கப்படுகின்றன.. இதில் கார்பன் மற்றும் மாங்கனீசு கலவை இருப்பதால், அரிப்பு விகிதம் மிகவும் குறைவாகும்.
மேலும், ரயில்கள் தொடர்ந்து ஓடுவதால் சக்கரங்களின் அழுத்தம் தண்டவாளங்களை இயல்பாகவே மெருகூட்டுகிறது.. இதனால் துருப்பிடிப்பு வாய்ப்பு குறைகிறது.. சின்ன குறைபாடுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டால், ரயில்வே ஊழியர்கள் உடனடியாகத் தண்டவாளங்களை மாற்றி விடுகிறார்கள்.. பாதுகாப்புக்காக சிறப்பு பூச்சும் பூசப்படுகிறது.. இதுவே தண்டவாளங்களின் நீடித்த தன்மைக்கான முக்கியமான காரணமாகும்..
ரயில் தண்டவாளங்கள் துருப்பிடிக்காது என்றாலும், இரும்பினால் ஆன பொருட்கள் பொதுவாகத் துருப்பிடிக்கின்றன.. இரும்பு ஈரமாக இருக்கும்போது, அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிகிறது.. அப்போது இரும்பின் மீது பழுப்பு நிற இரும்பு ஆக்சைடு படிகிறது.. இந்த பழுப்பு நிற பூச்சு ஆக்சிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடை உருவாக்குகிறது.. இதுதான் துருவை ஏற்படுத்துகிறது.. இதற்கு முழுக்க முழுக்க ஈரப்பதம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது..!!!
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications