பயணிகளின் பொருட்கள் திருடு போனால் ரயில்வே பொறுப்பு இல்லை.. உச்ச நீதிமன்றம் அளித்த முக்கிய உத்தரவு
சென்னை: ரயில் பயணத்தின் போது பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்கள் திருடு போனால் ரயில்வே பொறுப்பு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது ரயில்வேதான். வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளதா? என்று பார்த்த பிறகு தான் மாற்று வழியை பெரும்பாலான பயணிகள் யோசிப்பதுண்டு. ரயில்வேயை பொறுத்தவரை சொகுசான பயணம், மலிவான கட்டணம் என்பதோடு வயதான பயணிகள் பயணிப்பதற்கும் குழந்தைகளுடன் செல்பவர்களுக்கும் ரயில் பயணம் தான் மிகவும் சவுகரியமாக இருக்கும்.
இதன் காரணமாக பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் தொலை தூரங்களுக்கு பயணிக்கும் பயணிகள் தங்களுடன் லக்கேஜ்களையும் கொண்டு செல்வார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் லக்கேஜ்கள் சில சமயங்களில் திருடு போகும் சம்பவங்களும் ரயிலில் அரங்கேறுகிறது. இந்த நிலையில் தான், பயணிகளின் லக்கேஜ்கள் தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விவரத்தை பார்க்கலாம்:- சுந்தர் போலா என்ற தொழில் அதிபர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காசிவிஸ்வநாத் ரயிலில் டெல்லிக்கு பயணம் செய்து இருக்கிறார். ரயிலில் ரிசர்வேஷன் செய்து சுந்தர்பேலே பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது தனது பெல்ட் பையில் ஒரு லட்ச ரூபாய் பணம் வைத்திருந்து இருக்கிறார்.
இரவு பயணத்தின் போது அயர்ந்து தூங்கிய சுரேந்தர் போலா, அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து இருக்கிறார். அப்போது தனது பையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் காணாமல் போகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரயிலில் இருந்து இறங்கியதும் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அது மட்டும் இன்றி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆனையம், ரயில் பயணத்தின் போது பணம் திருடு போயிருப்பதால் ரயில்வே தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. குறைதீர் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிமன்றம், சுரேந்தர் போலாவுக்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தனது தீர்ப்பில், "ரயில் பயணத்தின் போது பயணிகள் தங்கள் பொருட்களை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருடு போகும் பட்சத்தில் அதற்கு ரயில்வே பொறுப்பு ஆகாது. ரயிலின் சேவை குறைபாடும் கிடையாது" என்று உத்தரவிட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications