Jana Nayagan Audio Launch: மலேசியாவில் மழை! பின்னணியில் ஒலித்த "மேகமாய் வந்து போகிறேன்.."! VIBE செய்த ரசிகர்கள்
கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா தொடங்கவுள்ள நிலையில் திடீரென மழை பெய்ததால் அங்கு விஐபி சீட்டில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு படக்குழுவினர் ரெயின் கோட் வழங்கும் போது விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் இடம்பெற்ற "மேகமாய் வந்து போகிறேன்.. " என்ற பாடல் ஒலித்ததால் ரசிகர்கள் வைப் செய்தனர்.

எச்.வினோத் இயக்கத்தில் "ஜன நாயகன்" எனும் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் ஆகும். இதனால் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் பேசப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆளும் கட்சியை விமர்சித்து சில காட்சிகள் இடம் பெறலாம் என்றும் படத்தின் மைய கருத்தே ஆளும் கட்சியை பற்றியதுதான் என்றும் கூறுகிறார்கள். படத்தின் கதை என்ன என்பது ஜனவரி 9ஆம் தேதிதான் தெரியவரும்.
இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் தனி விமானம் மூலம் நேற்றே மலேசியா புறப்பட்டார். அவரை போல் பூஜா ஹெக்டே, அட்லி, பிரியாமணி, நாசர், விஜய்யின் பெற்றோர் உள்ளிட்டோரும் மலேசியா சென்றுள்ளனர்.
இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும். 80 ஆயிரம் வாகனங்களை பார்க் செய்யலாம். இத்தனை பிரம்மாண்டமான மைதானத்தில் விஜய் ரசிகர்கள் நிரப்பிவிட்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு "தளபதி திருவிழா" என பெயரிடப்பட்டிருக்கிறது. முதலில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி சரண் பங்கேற்று, "மேகமாய் வந்து போகிறேன்..." என்ற பாடலை பாடுகிறார். இந்த இசை கச்சேரிக்கு பிறகு இசை வெளியீட்டு விழா இந்திய நேரப்படி 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இசை கச்சேரி 3.30 மணிக்கு தொடங்கியது. அப்போது திடீரென கோலாலம்பூரில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் விஐபி சீட்டில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது.
அதே சமயத்தில் எஸ்பிபி சரண் பாடிய "மேகமாய் வந்து போகிறேன்" என்ற பாடல் டைமிங்காக ஒலித்ததும் ரசிகர்கள் வைப் செய்தனர். இந்த பாடல் விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற படத்தில் இடம் பெற்றது. இதில் சிம்ரன் நடித்திருந்தார்.
1999ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இந்த படம் வெளியானது. இதன் இயக்குநர் எழில். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.
இந்த படத்தில் "தொட தொடு எனவே", "இன்னிசை பாடி வரும்", "இருவது கோடி", "பளபளக்குது புது நோட்டு", "மேகமாய் வந்து போகிறேன்" ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மேகமாய் வந்து போகிறேன் பாடலை ராஜேஷ் கிருஷ்ணன் பாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications