சென்னை மழை வெள்ளப் பாதிப்பு! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?
சென்னை: சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்த கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முழுவீச்சில் களமாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு சேலத்திற்கு சென்றுவிட்டார்.
ஜெயக்குமார் மட்டுமே அதிமுகவின் முகமாக சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஓரளவு நிலைமையை சமாளித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது வயது மூப்பை கூட பொருட்படுத்தாமல் உடல் நலம் தளர்ந்த நிலையிலும் வேனில் தலைநகரையே சுற்றி வந்தார் கருணாநிதி. அதேபோல் திமுகவினரும் பம்பரமாக சுற்றிச் சுழன்று அரசு நிர்வாகத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அதுமட்டுமல்ல டெல்டா மண்டலத்தை சூறையாடிய கஜா புயலின் போதும் எந்த தாமதமும் இல்லாமல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முந்திக்கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஸ்பாட்டுக்கு சென்று மக்களை சந்தித்தார். இந்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் தவித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பெயருக்கு ஒரு இடத்தை மட்டும் பார்வையிட்டுவிட்டு ஊருக்கு பறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதைவிட ஹைலைட் என்னவென்றால் அடுத்தநாள் ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி யுவராஜின் தாத்தா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது தான். சென்னை மக்கள் உணவு கிடைக்குமா, பால் கிடைக்குமா, தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்து ஏக்க முற்று காத்திருந்த நிலையில் அதிமுகவின் மொத்த படையையும் களமிறக்கி அரசு நிர்வாகத்திற்கே டஃப் கொடுத்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி அழைத்திருந்தால் வெளிமாவட்ட நிர்வாகிகள் லாரி லாரியாக நிவாரணப் பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்திருப்பார்கள்.

அது அதிமுகவுக்கு வரும் நாட்களில் பெரிய பலமாக அமைந்திருக்கும். ஓ.பன்னீர்செல்வம் கூட 2 நாட்களாக கொளத்தூர் பகுதிக்கு சென்று அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டின் பெயரில் நிவாரணப் பொருட்களை வழங்கி கவனம் ஈர்த்திருந்தார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications