உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையஅதிகாரிகள் நேற்று இது பற்றி கூறுகையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதன் காரணமாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

rain fall likely to occur at Coastal districts over Tamilnadu

வரும் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும்.

நேற்று காலை நிலவரப்படி அதிபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பெய்திருந்தது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் 9 செமீ, திருச்செந்தூரில் 8 செமீ, பவானி, ராதாபுரம், குன்னூர், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பெய்து இருந்தது. போடி, சிவகிரி, சாத்தான்குளம், தூத்துக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழை பெய்து இருந்தது என்று தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+