ஜில்லென்று மாறிய வானிலை.. சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சோத்துப்பாறை அணை பகுதியில் தொடர் மழை: நீர்மட்டம் 79 அடியாக உயர்வு!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையே குளிர்பிரதேசம் போல் காட்சியளிக்கிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம், கிண்டி, தாம்பரம், நுங்கம்பாக்கம், கே கே நகர், நங்கநல்லூர், ஆலந்தூர். மேடவாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications